பாடல் #39233
தேவ மைந்தன் யோவான
🔤 Thaeva Maindhan Yovaana
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.தேவ மைந்தன் யோவான ருகேகியே தீட்சை பெற்று யோர்தானதியைக் கடந் தாவலாயுப வாசிக்கச் சென்றனர் ஆரணி யத்திலே மகா கொடும் ஆரணியத்திலே. 2. சிங்கம் யாழி புல்வாய் பல்லுகங்களும் சிந்துரம் புண்டரீகம் செந்நாய்களும் சங்கமாய் தழங்கும் பழு வந்தனில் தந்தையா ரெழுந்தார் தவஞ் செய்யத் தந்தையா ரெழுந்தார். 3. வானரங் கொஞ்சி மந்திமேல் சாயவும் மந்தி கெஞ்சி யருங் கொம்பில் பாயவும் கன கான மான்களும் மான் களு மேயவும் அகண்ட வனத் தெழுந்தார் கிறிஸ்து ஒரகண்டவனத் தெழுந்தார். 4. வன்ன மாடப் புறாவின மேவிய மஞ்சையும் குயிலும் நின்று கூவிய அன்ன மாட வனக் கிளி பாடிய ஆரணியத் துற்றார் கிறிஸ்து ஓர் ஆரணியத்துற்றார். 5. வண் டினங்களி சைந்து பண்ணீடிய வானம்பாடி நின்றானந்தம் பாடிய கண்ட துஷ்ட விலங்குகள் கூடிய கானகத் தெழுந்தார் தவஞ் செய்ய கானகத் தெழுந்தார். 6. நாதனா ரிரவு பகல் நாற்பது நாளதாயுப வாசித் திருந்த பின் வாதையாய்ப் பசி தாப முண்டானதால் வாடியே யிருந்தார் வனத்திடை வாடியே யிருந்தார். 7. அப்பொழுது பராபரன் மைந்தனீ யாகிலிக் கலை அப்ப மியற்றெனத் தப்பிதத் தலகை வந்து சாற்றவே தந்தையார் சொலு வார் மறு மொழி தந்தையார் சொல்லுவார். 8. மாந்தன் அப்பத்தினாலல்ல வானவன் வார்த் தையா லும் பிழைப்பனென் றோதவே யேந்திரமான ஒருப் பரிகையின் மேல் ஏற்றிற் றண்ணலையே அலகை கொண் டேற்றிற் றண்ணலையே. 9. ஏற்றித் தேவ குமார னெனிற் குதி யிங்குன் காலிட றாப்படிக் காஞ்சுகள் ஆற்றித் தாங்கிக் கொண்டே கக்கற்பிப்பர் அனாதி யானென்றதே ஒன்றான அனாதியா னென்றதே. 10. என்று தீட்டினதா மெனப்பேய் சொல இயேசு உன் பரனாகிய கர்த்தனை சென்று சோதனை செய்யத் தகா தெனத் தீட்டி வைத்த தென்றார் திரும்பவும் தீட்டி வைத்த தென்றார். 11. பின்னு முன்னத மாமலை ஒன்றிலே பேறு ளானைப் பிசாசு கொண் டேற்றியே இந்நிலத்தினில் ராட்சியம் வல்லமை யாவுங் காட்டினதே கணத்தினில் யாவுங் காட்டினதே 12. காட்டித் தாழ விழுந்தெனை யேத்தினால் காணும் யாவு முனக் களிப் பேனென மேட்டிமைக் குணமான பொல்லாதவே தாளங் கூறியதே துணிந்து வேதாளங் கூறியதே 13. அக்கணங் கிறிஸ் தத்துடனே போசாத் தானே யேக பரா பரனைப் பணிந்து ஒக்க அர்ச்சனை செய் யென்றியற்றின துண்மையா மென்றனர் வரைந்த தீ துண்மையா மென்றனர். 14. என்ற அக்கணமே கணம் விட்டகன் றேகிற்றும் பர்கள் சேர்ந்து வந்தையனுக் கொன்றவே பய பக்தியினால் மிகுத் தூழியம் செய்தனர் கிறிஸ்துவுக் கூழியம் செய்தனர்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.thaeva Maindhan Yovaana Rukaekiyae Theetsai Perru Yorthaanathiyaik Katan Thaavalaayuba Vaasikkach Sendranar Aarani Yatthilae Makaa Kotum Aaraniyatthilae. 2. Singgam Yaazhi Pulvaay Palluganggalum Sinthuram Pundareegam Sennaaykalum Sanggamaay Thazhangkum Pazhu Vandhanil Thanthaiyaa Rezhunthaar Thavanj Seyyath Thanthaiyaa Rezhunthaar. 3. Vaanarang Konjsi Manthimael Saayavum Manthi Kenjsi Yarung Kompil Paayavum Kana Kaana Maankalum Maan Kalu Maeyavum Aganda Vanath Thezhunthaar Kiristhu Orakandavanath Thezhunthaar. 4. Vanna Maadap Puraavina Maeviya Manjsaiyum Kuyilum Ninru Kooviya Anna Maada Vanak Kili Paatiya Aaraniyath Thurraar Kiristhu Or Aaraniyatthurraar. 5. Van Tinanggali Sainthu Panneetiya Vaanampaati Ninraanandham Paatiya Kanda Thushta Vilangkugal Kootiya Kaanakath Thezhunthaar Thavanj Seyya Kaanakath Thezhunthaar. 6. Naadhanaa Riravu Pakal Naarpathu Naalathaayuba Vaasith Thirundha Pin Vaathaiyaayp Pasi Thaaba Muntaanathaal Vaatiyae Yirunthaar Vanatthitai Vaatiyae Yirunthaar. 7. Appozhuthu Paraabaran Maindhanee Yaakilik Kalai Appa Miyarrenath Thappidhath Thalakai Vanthu Saartravae Thanthaiyaar Solu Vaar Maru Mozhi Thanthaiyaar Solluvaar. 8. Maandhan Appatthinaalalla Vaanavan Vaarth Thaiyaa Lum Pizhaippanen Rodhavae Yaenthiramaana Orup Parikaiyin Mael Aerrir Rannalaiyae Alakai Kon Taerrir Rannalaiyae. 9. Aerrith Thaeva Kumaara Nenir Kuthi Yingkun Kaalida Raappatik Kaanjsugal Aarrith Thaangkik Kontae Kakkarpippar Anaathi Yaanendrathae Onraana Anaathiyaa Nendrathae. 10. Enru Theettinathaa Menappaey Sola Yesu Un Paranaakiya Kartthanai Senru Sodhanai Seyyath Thakaa Thenath Theetti Vaittha Thenraar Thirumbavum Theetti Vaittha Thenraar. 11. Pinnu Munnatha Maamalai Onrilae Paeru Laanaip Pisaasu Kon Taerriyae Innilatthinil Raatsiyam Vallamai Yaavung Kaattinathae Kanatthinil Yaavung Kaattinathae 12. Kaattith Thaazha Vizhunthenai Yaetthinaal Kaanum Yaavu Munak Kalip Paenena Maettimaik Kunamaana Pollaadhavae Thaalang Kooriyathae Thuninthu Vaethaalang Kooriyathae 13. Akkanang Kiris Thatthudanae Posaath Thaanae Yaega Paraa Paranaip Paninthu Okka Arcchanai Sey Yenriyarrina Thunmaiyaa Mendranar Varaindha Thee Thunmaiyaa Mendranar. 14. Endra Akkanamae Kanam Vittakan Raekirrum Parkal Saernthu Vanthaiyanuk Kondravae Paya Pakthiyinaal Mikuth Thoozhiyam Seythanar Kiristhuvuk Koozhiyam Seythanar.