பாடல் #39232
போய்வாறேன் பிள்ளைகளே
🔤 Poyvaaraen Pillaigalae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போய்வாறேன் பிள்ளைகளே நானும்மை விட்டு 1.போய் வாறேனா னும்மைவிட்டுப் புன்மரத்தில் பாடுபட்டு மாய் வாய்ச் செந்நீர் சொரிந்திட்டு மாண் டெந்தை தலத்துட் பட்டு - போய் 2. சீடர்களே நாமன்பாகச் - சேர்ந்திருந்தோமே சிநேக மோடு விடை தாரும் போக மோட்சத்திற்கு நானேக - போய் 3. கொஞ்ச நேரம் உங்களோடு கூட இருக்கின்றேன் பாடு மிஞ்ச நீங்க ளென்னைத் தேடு வீர்கள் முஸ்திப்பாக்க வீடு - போய் 4. நானன்பாயிருந்தாப் போலே நட் பொருதர் ஒர்தர் மேலே மேன்மையாய் நீர் வைப்பதாலே மெய்ச் சீஷராவீர் மென் மேலே - போய் 5. அப்போஸ்தலரே நீர் வெம்பி அஞ்ச வேண்டாம் என்னை நம்பி இப்போ திருங்கள் விசும்பில் ஏற்றுக் கொள்ளுவேன் திரும்பி - போய் 6. பேதுருவே பேய்கனன்று பேச வேண்டினே னுழன்று பேதலிப் பாய் என்னை இன்று பின் செலாய் பின் செல்லாய் யின்று - போய் 7. மாது பெரும் போது துக்க மாவாள் சேய் பெற்றால் முழுக்க வாதை மறப்பாள் நீர் மிக்க மனங்கலங்க வேண்டாம் நிற்க - போய் 8. நீங்களேங்கித் துக்கிப்பீர்கள் நேமியோர் சந்தோஷிப்பார்கள் நீங்கவே மகிழ்வாம் சூர்கள் நித்தம் சுபமாய் வாழ்வீர்கள் - போய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Poyvaaraen Pillaigalae Naanummai Vittu 1.poy Vaaraenaa Nummaivittup Punmaratthil Paatubattu Maay Vaaych Senneer Sorinthittu Maan Tenthai Thalatthut Pattu - Poy 2. Seedarkalae Naamanpaagach - Saernthirunthomae Sinaega Motu Vitai Thaarum Poga Motsatthirku Naanaega - Poy 3. Konjja Naeram Unggalotu Kooda Irukkinraen Paatu Minjja Neengga Lennaith Thaetu Veerkal Musthippaakka Veetu - Poy 4. Naananpaayirunthaap Polae Nat Porudhar Orthar Maelae Maenmaiyaay Neer Vaippathaalae Meych Seesharaaveer Men Maelae - Poy 5. Apposthalarae Neer Vempi Anjja Vaentaam Ennai Nampi Ippo Thirunggal Visumpil Aerruk Kolluvaen Thirumpi - Poy 6. Paethuruvae Paeykananru Paesa Vaentinae Nuzhanru Paedhalip Paay Ennai Inru Pin Selaay Pin Sellaay Yinru - Poy 7. Maathu Perum Pothu Thukka Maavaal Saey Perraal Muzhukka Vaathai Marappaal Neer Mikka Mananggalangga Vaentaam Nirka - Poy 8. Neenggalaengkith Thukkippeerkal Naemiyor Santhoshippaarkal Neenggavae Makizhvaam Soorkal Nittham Subamaay Vaazhveerkal - Poy