பாடல் #39231
ஒரே மைந்தனே பரன் மகனே
🔤 Orae Maindhanae Paran Makanae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரே மைந்தனே பரன் மகனே கண்மணியே ஞான மணனே. 1.சொந்தனை வழி நடத்தி துஷ்ட துரோகியர் கொலை புரிந்தார் அந்தர வெளியினில் அருங் கொடுங் கானலில் அற்புத நற்பெலிக் கொப்புடன் எழுந்த - ஒரே 2. அந்தர சொற்கம் படைத்தோய் பாழ் அகிலத் தோர் பவத்தாலே ஆக்கினை வாரடி அறையு மீழ் நீர்க் கறை யாவையும் சகித்தே அனைத்தையும் பொறுத்த - ஒரே 3. மண்டலம் தன்னையாண்ட தவிது மைந்தனாக வந்தானே மாண்டு ரட்சித் தடிமை மீண்டு கொள அன்பாக நீண்ட துயர்கள் பல பூண்ட கிறிஸ்து வென்ற - ஒரே 4. சென்னியில் தைத்த முடியை அவர் சிலுவையே மோதி வருத்த சீருடன் செருசலை வீதி சென்று பதேசம் செய்துதம் செங்குருதி சிந்தி மடிந்த - ஒரே 5. கொல்கொதா மலைப் புறத்தே சுமை குனிந்தே புயத் தெடுத்தே குரூர நிந்தையின் குரு சாணி யிலறைந்து கொன்றவர்க்காக மன்றாடுதல் தெரிந்த - ஒரே 6. சுந்தரக் கன்னிமாது அப்போ துன் பவா ளுருவிப் பாய்ந்து தோற்ற அரிய பிதா ஆற்று தீர்ப்பிதுவோ குலை துடிக்கு தென் னெஞ்சம் பதைக்கு தென்றழுத - ஒரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Orae Maindhanae Paran Makanae Kanmaniyae Njaana Mananae. 1.sondhanai Vazhi Natatthi Thushta Thurokiyar Kolai Purinthaar Andhara Veliyinil Arung Kotung Kaanalil Arpudha Narpelik Koppudan Ezhundha - Orae 2. Andhara Sorkam Pataitthoy Paazh Akilath Thor Pavatthaalae Aakkinai Vaarati Araiyu Meezh Neerk Karai Yaavaiyum Sakitthae Anaitthaiyum Poruttha - Orae 3. Mandalam Thannaiyaanda Thavithu Maindhanaaga Vanthaanae Maantu Ratsith Thatimai Meentu Kola Anpaaga Neenda Thuyarkal Pala Poonda Kiristhu Vendra - Orae 4. Senniyil Thaittha Mutiyai Avar Siluvaiyae Mothi Varuttha Seerudan Serusalai Veethi Senru Pathaesam Seythudham Sengkuruthi Sinthi Matindha - Orae 5. Kolkothaa Malaip Puratthae Sumai Kuninthae Puyath Thetutthae Kuroora Ninthaiyin Kuru Saani Yilarainthu Kondravarkkaaga Manraatudhal Therindha - Orae 6. Sundharak Kannimaathu Appo Thun Pavaa Luruvip Paaynthu Thortra Ariya Pithaa Aarru Theerppithuvo Kulai Thutikku Then Nenjjam Pathaikku Thendrazhudha - Orae