பாடல் #39230
பாடிப் புகழ் சொலவே பதம்
🔤 Paatip Pugazh Solavae Patham
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாடிப் புகழ் சொலவே பதம் நாடி மகிழ் கொளவே பட்ச மிச்ச இரட்சகனேசுவை பாடிப் புகழ் சொலவே. கூடி யிசைவாக அருகோடி நிசமாக கோதை மேதை வதை சிதைய வே - பாடி 1.தலையே நீ வணங்காய் தலை முண்முடி வாதையினால் தலையாம் துற்பவம் போக்கும் தலைவனை தலையே நீ வணங்காய் - பாடி 2. கண்காள் காணீர்களோ - கண்ணால் பேதுருவைக் கனிந்து கண்மணிபோல் கண் காணித்த கண்ணணை கண்காள் காணீர்களோ - பாடி 3. செவிகாள் கேளீர்களோ செபித் தேற்றும் அருள் வோமெனும் சிவஞான நித்திய சீவ வசனத்தை செவிகாள் கேளீர்களோ - பாடி 4. மூக்கே நன்மணமே ஈசாக்கு ஏசா அறிநேர் முக்காலத் தபிஷேக மதலையாள் மூக்கே நன் மணமே - பாடி 5. வாயே வாழ்த்துரையே மனவாக்குணர் மெய் நினைவால் மாயா மெய்க் கிறிஸ்தாயனை வாய்மையாய் வாயே வாழ்த்துரையே - பாடி 6. தோளில் சிலுவை தொட்டார் நம் தோள் சுமை நீக்கிவிட்டார் தோழனாகத் தோன்றலுமானார் தோளில் சிலுவைத் தொட்டார் - பாடி 7. கரனேரேறெடு மேகரும் பேய்வல் வினைதணிய கரங்கால் ஆணிகடாவச் சகித்தோனை கரனேரேறெடுமே - பாடி 8. முழங்கால் படியிரோ முனங் காவிலிறைஞ் சினனை முணங்கா முழங்கா முனங்கா வெனவே முழங்கால் படியிரோ - பாடி 9. உள்ள முருகிரோ குருசில் உள்ள நம் வள்ளலுக்கே உள்ளதுள்ள துன்னதன் உண்மையே உள்ள முருகிரோ - பாடி 10. தெண்டனிட்டே தொழுவீர் நரக தெண்டனைக் கேனழுவீர் தெண்டமு முண்டோ தொண்டருக் கென்றென்றும் தெண்டனிட்டே தொழுவீர் - பாடி 11. தேகமும் ஆவியுமே திரியேகனைத் தாவியுமே சினேகமாயலோக அநேக சீர் சொல் லெலியாவுமே - பாடி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paatip Pugazh Solavae Patham Naati Makizh Kolavae Patsa Miccha Iratsakanaesuvai Paatip Pugazh Solavae. Kooti Yisaivaaga Arukoti Nisamaaga Kothai Maethai Vathai Sithaiya Vae - Paati 1.thalaiyae Nee Vanangkaay Thalai Munmuti Vaathaiyinaal Thalaiyaam Thurpavam Pokkum Thalaivanai Thalaiyae Nee Vanangkaay - Paati 2. Kankaal Kaaneerkalo - Kannaal Paethuruvaik Kaninthu Kanmanipol Kan Kaanittha Kannanai Kankaal Kaaneerkalo - Paati 3. Sevikaal Kaeleerkalo Sepith Thaerrum Arul Vomenum Sivanjaana Nitthiya Seeva Vasanatthai Sevikaal Kaeleerkalo - Paati 4. Mookkae Nanmanamae Eesaakku Aesaa Arinaer Mukkaalath Thapishaega Mathalaiyaal Mookkae Nan Manamae - Paati 5. Vaayae Vaazhtthuraiyae Manavaakkunar Mey Ninaivaal Maayaa Meyk Kiristhaayanai Vaaymaiyaay Vaayae Vaazhtthuraiyae - Paati 6. Tholil Siluvai Thottaar Nam Thol Sumai Neekkivittaar Thozhanaagath Thondralumaanaar Tholil Siluvaith Thottaar - Paati 7. Karanaeraeretu Maegarum Paeyval Vinaidhaniya Karangkaal Aanigataavach Sakitthonai Karanaeraeretumae - Paati 8. Muzhangkaal Patiyiro Munang Kaavilirainj Sinanai Munangkaa Muzhangkaa Munangkaa Venavae Muzhangkaal Patiyiro - Paati 9. Ulla Murukiro Kurusil Ulla Nam Vallalukkae Ullathulla Thunnathan Unmaiyae Ulla Murukiro - Paati 10. Thendanittae Thozhuveer Naraka Thendanaik Kaenazhuveer Thendamu Munto Thondaruk Kenrenrum Thendanittae Thozhuveer - Paati 11. Thaegamum Aaviyumae Thiriyaeganaith Thaaviyumae Sinaegamaayaloga Anaega Seer Sol Leliyaavumae - Paati