பாடல் #3923
வாரீரோ வினை
🔤 Vaareero Vinai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாரீரோ? வினை தீரீரோ? என்னைக் காரீரோ? ஜீவன் தாரீரொ, யேசு. வாரேனென்றீர், வரந் தாரேனென்றீர், சுவாமீ; பாரினிலே யெனக்கு யாருமில்லை, துணைக்கு. - வா 1.தேனே, மரிமகனே, தேடி மறுகுங் கோனே. சேனைகளின் சீமானே, சிந்தை கலங்கி நானே கானகமே மேவும் மானது போலானேன்; வானகம் போன தேவா, ஏனோ வரத் தாமதம்? - வா 2.அட்ட திக்கெங்கு மென்னைத் துட்டப் பசாசுக் கூட்டம் இட்டப் படுத்தவல்லோ கிட்ட வளையுது, பார் அடுத்தாலோ, அம்பைத் தொடுத்தாலோ என்ன! அடுபடையாக நின்று தடு படை செய்வீர், யேசு. - வா 3.காணாத ஆட்டைத் தேடிக் காடெங்கும் சென்ற கோன் நீர் கண்டு பிடித்த ஆட்டைக் கொண்டு தொழுவஞ் சேர்க்கக் கருத்துடனே மிக உரித்துடனே இரு கரத்திலேந்தி வலப் புறத்தில் வைப்பீர் திண்ணம். - வா 4.வீடு எனக்குச் செய்ய மேலோகம் போன தேவா, கூட இருத்தி வைக்கக் கூப்பிட வாறேனென்றீர்; கொண்டு வருவீர் முடி, நின்று வருவீர் நொடி; கண்டு மகிழ்வேன், கூடி நின்று புகழ்வேன் கெடி. - வா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaareero? Vinai Theereero? Ennaik Kaareero? Jeevan Thaareero, Yaesu. Vaaraenenreer, Varan Thaaraenenreer, Suvaamee; Paarinilae Yenakku Yaarumillai, Thunaikku. - Vaa 1.thaenae, Marimakanae, Thaeti Marukung Konae. Saenaigalin Seemaanae, Sinthai Kalangki Naanae Kaanakamae Maevum Maanathu Polaanaen; Vaanakam Pona Thaevaa, Aeno Varath Thaamatham? - Vaa 2.atta Thikkengku Mennaith Thuttap Pasaasuk Koottam Ittap Patutthavallo Kitta Valaiyuthu, Paar Atutthaalo, Ampaith Thotutthaalo Enna! Atubataiyaaga Ninru Thatu Patai Seyveer, Yaesu. - Vaa 3.kaanaadha Aattaith Thaetik Kaatengkum Sendra Kon Neer Kantu Pitittha Aattaik Kontu Thozhuvanj Saerkkak Karutthudanae Miga Uritthudanae Iru Karatthilaenthi Valap Puratthil Vaippeer Thinnam. - Vaa 4.veetu Enakkuch Seyya Maelogam Pona Thaevaa, Kooda Irutthi Vaikkak Kooppida Vaaraenenreer; Kontu Varuveer Muti, Ninru Varuveer Noti; Kantu Makizhvaen, Kooti Ninru Pugazhvaen Keti. - Vaa