பாடல் #39228
ஏதன் காவடர் தீதை
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
ஏதன் காவடர் தீதை நீக்கவோ ஏத மற்ற பரன் இணை யொன்றிலன் நரன் சொரூபன் பரனே ஏகியே ஏகியே மரித்தார் குருசிலே யாவரும் உய்யவே. - ஏதன் 1.காலைக் கொத்தின ஆலச் சர்ப்பத்தால் காலம் வந்ததையோ இறந்தனையோ கடும் தயையோ பரனே காதலா காதலா எனை மீட்க வந்த கருணைக் கிறிஸ்தையா - ஏதன் 2. ஏது செய்துய்வேன் பேதையாளினி எவ்விதம் பிழைப்பேன் உயிர் தழைப்பேன் மனஞ் சகிப்பேன் பரனே ஏங்கிறேன் ஏங்கிறேன் எனின் பிராண நாதனே இரட்சியும் இரட்சியும் - ஏதன் 3. பொன்னைச் செய்தொழில் விண்ணை யாளுமா பொன்னையா பின்னையா ரெனக்கன்னையா இரு கண்ணையா பரனே பூபதி பூபதி எருசாலே மா நீதி பொன்றினதே கதி - ஏதன் 4. மாதனை பவம் வேதனைக் கிடம் வைத்து நேர் பலித்தோ அருள் கருத்தோ தயை மிகுந்தோ பரனே வாடியே வாடியே குரு சூடிறந்தனை மன்னவா முன்னமா - ஏதன் 5. வாரடியுடன் முண்முடி வைத்திவ் வாரடித் தனரோ படுத்தினரோ வதைத்தனரோ பரனே மட்டிலான் மட்டிலான் மூன்றாணி யிற்றொங்க வந்த தோமா விதி - ஏதன் 6. கொல்கொதாவிலே ஒல்கியே யுயிர் கொல்ச் செய்தனரே ஆசாரியரே வேத பாரரே பரனே கோபமா கோபமா அடமே மிகுத்திந்தக் கோரணியோ கொண்டார் - ஏதன் 7. ஆறவும் மனந் தேறவும் வழி ஆரிடம் பெறுவேன் தயை மறவேன் உலகு றவேன் பரனே ஆசையாய் ஆசையாய் எனை மீட்க வந்தமா அம்பரா உன் சரண் - ஏதன்