பாடல் #39227
ஆதி வேதனே பிராண நாதனே
🔤 Aathi Vaedhanae Piraana Naadhanae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதி வேதனே பிராண நாதனே அந்த நந்த வனப் பாம்பு வந்துனைத் தீண்டலாச்சோ 1.ஆ என் பாவமோ தேவ கோபமோ அத்தனே முனாதி சர்ப்பம் கொத்தின கொடூரந் தானோ - ஆதி 2. எங்கே ஆறுவேன் மனந்தேறுவேன் இந்த உலகந்தனில் மடிந்துயிர் பிரிந்த கோனே - ஆதி 3. ஆவி போகுதே மனம் நோகுதே ஐயனே சிலுவைதனில் உய்த்ததென் பாவந் தானோ - ஆதி 4. ஆலப் பாம்புனின் காலைக் கீறு மென்று அத்தனார் உரைத்த வாய்மை இத்தகை முடிந்ததன்றோ - ஆதி 5. மேசியா மனா இயேசு நாமனா வேதநாயகன் புலம்பல் பாதகி மனங்கலங்க. -ஆதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathi Vaedhanae Piraana Naadhanae Andha Nandha Vanap Paampu Vanthunaith Theendalaachso 1.aa En Paavamo Thaeva Kobamo Atthanae Munaathi Sarppam Kotthina Kotooran Thaano - Aathi 2. Engkae Aaruvaen Mananthaeruvaen Indha Ulakandhanil Matinthuyir Pirindha Konae - Aathi 3. Aavi Pokuthae Manam Nokuthae Aiyanae Siluvaidhanil Uytthathen Paavan Thaano - Aathi 4. Aalap Paampunin Kaalaik Keeru Menru Atthanaar Uraittha Vaaymai Itthakai Mutindhathanro - Aathi 5. Maesiyaa Manaa Yesu Naamanaa Vaedhanaayakan Pulambal Paadhaki Mananggalangga. -aathi