பாடல் #39226
இயேசு சுவாமி ஐயா சிலுவை
🔤 Yesu Suvaami Aiyaa Siluvai
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு சுவாமி ஐயா சிலுவை யோடு எவ்விடம் செல்வதையா சிலுவை யோடு எங்கே சொல் தயையா மிக ஏங்கியே துயர் தாங்கியே பறந் தேங்கிய நடையாய். 1.மாசில்லாத பரா பரப்பிரம மன்னாயே யோவா ஆதி மாந்தர் செய்வினை தீர்ந்தகலவோ நேர்ந்த பாதை யந்தோ - இயேசு 2. சீ மோன் சிரேனையனோ சரிநடை சேர்ந்து சுமப் பானோ திகழ் பூமி அந்தரவான மெண்டிசை பூரணனுன் சுமையை - இயேசு 3. கொல்கொதாப் பாதையிலே பகலின் கொடூர வெயிற் பொழுதில் சுமை கூனியே கொண்டு சோரி மண்டிது வண்டிடச் சென்றிட வே - இயேசு 4. வெட்ட வெளியினிலே பொடிச் சுடும் வீதி கொதிப் பினிலே திட மேனி வெம்பி விடாய் நிரம்பி தளம் பியே துன்புறவே - இயேசு 5. மாத ரழுது வர எருசலை மக்கள் கலக்க முற முகம் வாடியே வழிக் கூடியே எமைத் தேடிய பாதை இதா - இயேசு 6. சிந்தை நடுங்குதையா எம்பாதகந் தீர்த்திட வேதனை யோ முழுத் தேகம் யாவும் அநேக நேகமாய்ச் செந்நீர் ஒழுகு தையோ - இயேசு 7. நீதி நிறை வேறப் பிதாவின் நெடுந்தீர்ப் பானதுவோ படு மேதினி பவச் சாதியார் துயர் பேதித்த கற்றிடவோ - இயேசு 8. சங்கை மகராஜா கிருபையே தங்குங் கதிவாசா கவி தாசன் எலியா பேசு மேசியா மாச காயா நேயா - இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Suvaami Aiyaa Siluvai Yotu Evvidam Selvathaiyaa Siluvai Yotu Engkae Sol Thayaiyaa Miga Aengkiyae Thuyar Thaangkiyae Paran Thaengkiya Nataiyaay. 1.maasillaadha Paraa Parappirama Mannaayae Yovaa Aathi Maandhar Seyvinai Theerndhakalavo Naerndha Paathai Yantho - Yesu 2. See Mon Siraenaiyano Sarinatai Saernthu Sumap Paano Thigazh Poomi Andharavaana Mentisai Poorananun Sumaiyai - Yesu 3. Kolkothaap Paathaiyilae Pakalin Kotoora Veyir Pozhuthil Sumai Kooniyae Kontu Sori Mantithu Vantidach Senrida Vae - Yesu 4. Vetta Veliyinilae Potich Sutum Veethi Kothip Pinilae Thida Maeni Vempi Vitaay Nirampi Thalam Piyae Thunpuravae - Yesu 5. Maadha Razhuthu Vara Erusalai Makkal Kalakka Mura Mugam Vaatiyae Vazhik Kootiyae Emaith Thaetiya Paathai Ithaa - Yesu 6. Sinthai Natungkuthaiyaa Empaadhakan Theertthida Vaedhanai Yo Muzhuth Thaegam Yaavum Anaega Naegamaaych Senneer Ozhuku Thaiyo - Yesu 7. Neethi Nirai Vaerap Pithaavin Netuntheerp Paanathuvo Patu Maethini Pavach Saathiyaar Thuyar Paethittha Karridavo - Yesu 8. Sangkai Makaraajaa Kirupaiyae Thangkung Kathivaasaa Kavi Thaasan Eliyaa Paesu Maesiyaa Maasa Kaayaa Naeyaa - Yesu