பாடல் #39224
அல்லல்லா யாமவுல்லா
🔤 Allallaa Yaamavullaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லல்லா யாமவுல்லா ஆசதில்லா யேசல்லா ஆநலவா மானுவேலா செலவா காவலா 1.சொல்லல்லா றூகல்லா துல்லிப பொற் கோடிகல்லா துத்திய செங்கோலோலா சத்திய சங்கா பாலா 2. தேவகுரு பூசுரா சீவ பரமே சுரா திரித்து வத்தராதரா ஒருத்துவப் பராபரா 3. மேன்மைக்குல சேகரா-ஞானக்கருணாகரா மித்துரு சிங்காராவே சத்துரு சங்காராவோ 4. உச்சித நிதானமே உன்னத வெகுமானமே அட்செய தியானமே அற்புத மெஞ்ஞானமே. 5. நம்பும் விசுவாசமே ஞானப் பிரகாசமே நாட்டமேயதி நேசமே யீட்டமே கதி வாசமே. 6. மாட்டுக் கொட்டிலோ உச்சம் ஆட்டுக் குட்டிக்கோ மிச்சம் வந்தெனமோ லட்சம் உந்தன் மனமோ பட்சம். 7. மூசா நபி தீட்டினான் ஈசா உனையே காட்டினான் முகம் அதுமதி கேட்டினால் அகமகித்தனை நாட்டினான். 8. வெற்றி ஞானப் பாட்டுக்கும் மிக்கவான நாட்டுக்கும் வேதநாயகனும் நானே மேசியாவும் நீ தானே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allallaa Yaamavullaa Aasathillaa Yaesallaa Aanalavaa Maanuvaelaa Selavaa Kaavalaa 1.sollallaa Roogallaa Thulliba Por Kotigallaa Thutthiya Sengkololaa Satthiya Sangkaa Paalaa 2. Thaevakuru Poosuraa Seeva Paramae Suraa Thiritthu Vattharaadharaa Orutthuvap Paraabaraa 3. Maenmaikkula Saegaraa-njaanakkarunaagaraa Mitthuru Singkaaraavae Satthuru Sangkaaraavo 4. Uchsidha Nithaanamae Unnatha Vekumaanamae Atseya Thiyaanamae Arpudha Menjnjaanamae. 5. Nampum Visuvaasamae Njaanap Pirakaasamae Naattamaeyathi Naesamae Yeettamae Kathi Vaasamae. 6. Maattuk Kottilo Uccham Aattuk Kuttikko Miccham Vanthenamo Latsam Undhan Manamo Patsam. 7. Moosaa Napi Theettinaan Eesaa Unaiyae Kaattinaan Mugam Athumathi Kaettinaal Agamakitthanai Naattinaan. 8. Verri Njaanap Paattukkum Mikkavaana Naattukkum Vaedhanaayakanum Naanae Maesiyaavum Nee Thaanae.