பாடல் #39220
ஐயா எது வேணும்
🔤 Aiyaa Ethu Vaenum
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஐயா எது வேணும் அருள்பதியே லட்சம் அனந்த வந்தனம் துதியே. 1.மெய்யா யெனைப் புரக்க வையத்துதித்த பரா வேண்டும் விண்ணப்பம் வேணுமா வேணுமா வேணுமா வானோர் துய்யோனுனைப் புகழும் பொய்யாசுகிர்த செல்வ சொந்தர சொல் அப்பம் வேணுமா. ஐயா 2. கேராபீன் சேராபீன் கின்னரர் கெம்புரர் கீர்த்திக்கும் புகழ் வேணுமா வேணுமா வேணுமா இந்தப் பாரோர் மனந்திரும்பி யாராதனை விளம்பிப் பணியும் மகிழ்வும் வேணுமா. ஐயா 3. சேட்டனேரோதே ராசன் கோட்டையரண்மனையின் சிறப்பு மகிமை வேணுமா வேணுமா வேணுமா வெல்லை மேட்டின்மேற் காட்டிடை மாட்டுக்கொட்டிலுற்ற மிருதுபுல்சுகம் வேணுமா. ஐயா 4. பச்சை வயிரம் ரத்தின மிச்சமதென சித்திரம் பகல் வாடும் பூ வேணுமா வேணுமா வேணுமா செயா அச்சயா முச்சகா தட்சகா ரட்சியென் றறையுமா அன்பு வேணுமா. ஐயா 5. நேசயேசு ராச மேசியா நிசமே நிறையு மிதையம் வேணுமா வேணுமா வேணுமா கெட்ட பாசமுவாசையில் மோசமாயு ழன்றோரின் பவமுஞ் சிதைய வேணுமா. ஐயா 6. அதிபதி யிது ததி நிதநித மருள்கதி அபையஞ் சமையம் வேணுமா வேணுமா வேணுமா நல்ல புதிய உச்சித பத கவி ஞனெலியா வுனைப் போற்றுஞ் சுமையும் வேணுமா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aiyaa Ethu Vaenum Arulpathiyae Latsam Anandha Vandhanam Thuthiyae. 1.meyyaa Yenaip Purakka Vaiyatthuthittha Paraa Vaentum Vinnappam Vaenumaa Vaenumaa Vaenumaa Vaanor Thuyyonunaip Pugazhum Poyyaasukirtha Selva Sondhara Sol Appam Vaenumaa. Aiyaa 2. Kaeraapeen Saeraapeen Kinnarar Kempurar Keertthikkum Pugazh Vaenumaa Vaenumaa Vaenumaa Indhap Paaror Mananthirumpi Yaaraadhanai Vilampip Paniyum Makizhvum Vaenumaa. Aiyaa 3. Saettanaerothae Raasan Kottaiyaranmanaiyin Sirappu Makimai Vaenumaa Vaenumaa Vaenumaa Vellai Maettinmaer Kaattitai Maattukkottilurtra Miruthupulsugam Vaenumaa. Aiyaa 4. Pachsai Vayiram Ratthina Micchamathena Sitthiram Pakal Vaatum Poo Vaenumaa Vaenumaa Vaenumaa Seyaa Acchayaa Mucchakaa Thatsakaa Ratsiyen Raraiyumaa Anpu Vaenumaa. Aiyaa 5. Naesayaesu Raasa Maesiyaa Nisamae Niraiyu Mithaiyam Vaenumaa Vaenumaa Vaenumaa Ketta Paasamuvaasaiyil Mosamaayu Zhanrorin Pavamunj Sithaiya Vaenumaa. Aiyaa 6. Athibathi Yithu Thathi Nidhanidha Marulkathi Apaiyanj Samaiyam Vaenumaa Vaenumaa Vaenumaa Nalla Puthiya Uchsidha Patha Kavi Njaneliyaa Vunaip Porrunj Sumaiyum Vaenumaa.