பாடல் #39217
ஏலேல கூட்டம் வாக்கிலல்லோக்
🔤 Aelaela Koottam Vaakkilallok
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏலேல கூட்டம் வாக்கிலல்லோக் காட்டும் நல்லார் சர்வத்திரள் யாவருங்கூட்டம் பொல்லார் அக்கினிக்கணையம்புகளை யோட்டும். 1.பெத்தலேகஞ் சத்திரத்தில் மெத்த மாடடைகுடிலில் அர்த்த ஜாம ராத்திரியில் கர்த்தர் பிறந்தார் தரையில். - ஏலே 2. வானோர் கணங்கள் பாட வாத்தியங்கள் நீட கோனார் குதித்தாட கோவர்த்தனர் கூட. - ஏலே 3. காணிக்கைகள் நீட கன்னிமரியாள் பீட தோணக் கூடா நாட துரை பிறந்தார் தேட. - ஏலே 4. வாருங்கள் எல்லாரும் வகைவகையலங்காரம் சேருங்கள் விச்சித்திரம் சிறந்த பொற் பூஷணம். - ஏலே 5. தோரணங்கட்டுங்கள் துலங்கக்கொடி நாட்டுங்கள் வாரணம் பூட்டுங்கள் வட்ட மிட்டாடுங்கள். - ஏலே 6. பத்தியுடன் நில்லுங்கள் பராபரனைப் பணியுங்கள் பதக விக்யானங்கள் இதமுடன் கேளுங்கள். - ஏலே 7. வேத சாஸ்திர புராணங்கள் நாதகீர்த்தன ராகங்கள் ஆதிவார்த்தை ஆரம்பங்கள் ஓதும் வார்த்தை யனந்தங்கள். - ஏலே 8. கர்த்தரின் நாமம் கனத்த மகத்துவம் உத்தமத்தோர் அனைவோருமே வாரும் சித்தமகிழச் செபம் செய்யச்சேரும் அத்தனின் ஆசீர்வாதந் திரள்பாரும். - ஏலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aelaela Koottam Vaakkilallok Kaattum Nallaar Sarvatthiral Yaavarungkoottam Pollaar Akkinikkanaiyampugalai Yottum. 1.petthalaeganj Satthiratthil Mettha Maadataikutilil Arttha Jaama Raatthiriyil Kartthar Piranthaar Tharaiyil. - Aelae 2. Vaanor Kananggal Paada Vaatthiyanggal Needa Konaar Kuthitthaada Kovartthanar Kooda. - Aelae 3. Kaanikkaigal Needa Kannimariyaal Peeda Thonak Kootaa Naada Thurai Piranthaar Thaeda. - Aelae 4. Vaarunggal Ellaarum Vakaivakaiyalangkaaram Saerunggal Vichsitthiram Sirandha Por Pooshanam. - Aelae 5. Thorananggattunggal Thulanggakkoti Naattunggal Vaaranam Poottunggal Vatta Mittaatunggal. - Aelae 6. Patthiyudan Nillunggal Paraabaranaip Paniyunggal Pathaka Vikyaananggal Idhamudan Kaelunggal. - Aelae 7. Vaedha Saasthira Puraananggal Naadhakeertthana Raaganggal Aathivaartthai Aarambanggal Othum Vaartthai Yanandhanggal. - Aelae 8. Karttharin Naamam Kanattha Makatthuvam Utthamatthor Anaivorumae Vaarum Sitthamakizhach Sebam Seyyachsaerum Atthanin Aaseervaadhan Thiralpaarum. - Aelae