பாடல் #39214
ஐயா வழாதே
🔤 Aiyaa Vazhaathae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஐயா வழாதே யேசையா வழாதே ஐயா வழாதே யென்னப்பா வழாதே இம்மானுவேலரசே யென்னையா அழாதே 1.மெய்யா மேசையா ஓ மெய்யா மேசையா மெய்யா மேசையாவே வேதா வென்னேயாவிண் மீது சோபனங் கேட்கு தையா வழாதே. ஐயா 2. அன்பே யென்னாதா மாவன்பே யென்னாதா அன்பே யென்னாதா தேவ அர்ச்சய பொற்பாதா இஸ் றாவேலையாளுவா யென்னன்பே யழாதே. ஐயா 3. வானோர் கோமானே ஓவானோர் கோமானே வல்லமைக் கோனே மகத்துவத்தம் பிரானே யென்று மாறாக் கருணையின் சிமானே யழாதே. ஐயா 4. சாலேமின் கோவே யெருசாலேமின் கோவே தாவீதின் சுதாவே காவே ஓ கத்தாவே சறுவ சிவாற்றுமாவின் வாழ்வே யழாதே. ஐயா 5. ஆதாமின் பாவமோ ராதாமின் பாவம் அன்னை செய்து ரோகமதால் அத்தனிடு சாபமற் றாசீர்வாத முண்டாகிற்றண்ணாவழாதே. ஐயா 6. சங்கீதம்பாடி நற் சங்கீதம்பாடி வானோர் கொண்டாடிமுச் சாஸ்திரிகள் காணிக்கை நீடி சரண் சந்தித்துப் போற்ற வந்தார் சாமியழாதே. ஐயா 7. சத்தியப் பிரதாபா மாசத்தியப் பிரதாபா நித்தியத் தயாபா சமஸ்த நன்மைச் சொருபா திரி தத்துவ ஞான தீபா தயாளா வழாதே. ஐயா 8. தேவாதி தேவே ஓ தேவாதி தேவே திவ்விய பிதாவே திரி யேகத்துவ யோவாவே சுவி சேட கவி பாடுவான் சீராளா வழாதே. ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aiyaa Vazhaathae Yaesaiyaa Vazhaathae Aiyaa Vazhaathae Yennappaa Vazhaathae Immaanuvaelarasae Yennaiyaa Azhaathae 1.meyyaa Maesaiyaa O Meyyaa Maesaiyaa Meyyaa Maesaiyaavae Vaethaa Vennaeyaavin Meethu Sobanang Kaetku Thaiyaa Vazhaathae. Aiyaa 2. Anpae Yennaathaa Maavanpae Yennaathaa Anpae Yennaathaa Thaeva Arcchaya Porpaathaa Is Raavaelaiyaaluvaa Yennanpae Yazhaathae. Aiyaa 3. Vaanor Komaanae Ovaanor Komaanae Vallamaik Konae Makatthuvattham Piraanae Yenru Maaraak Karunaiyin Simaanae Yazhaathae. Aiyaa 4. Saalaemin Kovae Yerusaalaemin Kovae Thaaveethin Suthaavae Kaavae O Katthaavae Saruva Sivaarrumaavin Vaazhvae Yazhaathae. Aiyaa 5. Aathaamin Paavamo Raathaamin Paavam Annai Seythu Rogamathaal Atthanitu Saabamar Raaseervaadha Muntaakirtrannaavazhaathae. Aiyaa 6. Sangkeedhampaati Nar Sangkeedhampaati Vaanor Kontaatimuch Saasthirigal Kaanikkai Neeti Saran Santhitthup Portra Vanthaar Saamiyazhaathae. Aiyaa 7. Satthiyap Pirathaapaa Maasatthiyap Pirathaapaa Nitthiyath Thayaapaa Samastha Nanmaich Sorupaa Thiri Thatthuva Njaana Theepaa Thayaalaa Vazhaathae. Aiyaa 8. Thaevaathi Thaevae O Thaevaathi Thaevae Thivviya Pithaavae Thiri Yaegatthuva Yovaavae Suvi Saeda Kavi Paatuvaan Seeraalaa Vazhaathae. Aiyaa