பாடல் #39211
அல்லேலூயா வோசனா அல்லேலூயா
🔤 Allaelooyaa Vosanaa Allaelooyaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா வோசனா அல்லேலூயா அல்லேலூயா ஓசனா அல்லேலூயா அல்லா ஓசனா, அல்லா ஓசனா, அல்லா ஓசனா. - அல் 1.சொல்லுரையின் படியே பெத்லெ மெனும் வெல்லைமலை யடியே பரி சுத்தமாய் வளர் வஸ்துவாமொரு கத்தனான கிறிஸ்துவும் வந்தார். - அல் 2. ஆதியுமந்த மிலான் அனாதிதந் தாதையர் தந்தை சொலான் பவ மாற வல்லிருண் மாற அன்பர்கள் தேறவுங் கரையேறவும் வந்தார். - அல் 3. அந்தரத்தா லுலகை மயக்கிய தந்திரப்பேயலகை தலை அற்கவானவர் சொற்கவாசல் திறக்க மக்கள் சிறக்க உதித்தார். - அல் 4. மைந்தரனுகூலன் மகத்துவ விந்தை மனுவேலன் திரு மாலன் மெய்கிரு பாலன் முக்கிய நூலன் நற்குண சீலனும் வந்தார். - அல் 5. வானத் திருந்தருளாய் மகத்துவ ஞானம்பரம் பொருளாய் திவிய வஸ்துவான கிறிஸ்துமேவிய சித்திரமான நட்சத்திரங் கண்டோம். - அல் 6. தேவர்கள் அட்சய னைத்தியங்கிய பாவிகள் இரட்சகனை விச் சேத்திரமாய்ப்பத தோத்திரமேசெய நேத்திர மானமுச் சாத்திரர் வந்தார். - அல் 7. தூதர்கள் நேசனையே தவீதெனும் யூதர்கள் இராஜனையே கன சூசனைக் கிருபாசனைச் சரு வேசனைப் பத பூசனை செய்வோம். - அல் 8. வெல்லைப்பதிப் பெருமான் நவ எரு செல்லைக் கதித் திருமான்கவி வேதநாயகன் ஓது தாயகன் பாதகாத்திரம் எப்போதுமே தோத்திரம். - அல்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Vosanaa Allaelooyaa Allaelooyaa Osanaa Allaelooyaa Allaa Osanaa, Allaa Osanaa, Allaa Osanaa. - Al 1.solluraiyin Patiyae Pethle Menum Vellaimalai Yatiyae Pari Sutthamaay Valar Vasthuvaamoru Katthanaana Kiristhuvum Vanthaar. - Al 2. Aathiyumandha Milaan Anaathidhan Thaathaiyar Thanthai Solaan Pava Maara Vallirun Maara Anbarkal Thaeravung Karaiyaeravum Vanthaar. - Al 3. Andharatthaa Lulakai Mayakkiya Thanthirappaeyalakai Thalai Arkavaanavar Sorkavaasal Thirakka Makkal Sirakka Uthitthaar. - Al 4. Maindharanukoolan Makatthuva Vinthai Manuvaelan Thiru Maalan Meykiru Paalan Mukkiya Noolan Narkuna Seelanum Vanthaar. - Al 5. Vaanath Thirundharulaay Makatthuva Njaanambaram Porulaay Thiviya Vasthuvaana Kiristhumaeviya Sitthiramaana Natsatthirang Kantom. - Al 6. Thaevarkal Atsaya Naitthiyangkiya Paavigal Iratsakanai Vich Saetthiramaayppatha Thotthiramaeseya Naetthira Maanamuch Saatthirar Vanthaar. - Al 7. Thoodharkal Naesanaiyae Thaveethenum Yoodharkal Iraajanaiyae Kana Soosanaik Kirupaasanaich Saru Vaesanaip Patha Poosanai Seyvom. - Al 8. Vellaippathip Perumaan Nava Eru Sellaik Kathith Thirumaankavi Vaedhanaayakan Othu Thaayakan Paadhakaatthiram Eppothumae Thotthiram. - Al