பாடல் #39208
பூரண கிருபையின் மயமே
🔤 Poorana Kirupaiyin Mayamae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பூரண கிருபையின் மயமே தேவா பொற்புச் செப்பத் தொப்பற்றதிசயமே ஆரண சுப செப்ப சொரூபா யோவா அடியனையே ரட்சித்தாள். சீருச்சப் பட்சத்திருமுதலே சிட்டோர்க்காதரவே யனுசாரி தீமைக் கட்டற்றுப் பூமக்கட் கொத்துச் சாமத்தில் பெத்தலேமில் புற்கொட்டில் மேவுருவா, தேவரூபா-மூ வொருவா சீவவா தேசருள் வாசநேச சீமா சுரர் பதியே மாசதிலேசு ராச பூமா நரர் துதியே தேவ ரெல்லாம் நீடியடி தொழு பரா காவா தேடருமுன்னிரு சரண் மலர் இணைதுணையே கா கமகம பதநிசபா மாகா சக்க சக்க சக்கப்பமகமரீ கா கமகம பதநிசபா மாகா மகமரிசா நிரிசா ரீரிர்ரி ரிர்ரி மகரிகசா சக்கா காரிச மாமக காரி பாபப்ப பப்பதா தத்த தத்த நீநிந்நி நிந்நி சா சச்சச்சா சாதநிபா சாதநிபா சாநிதபா மாதபா பாதப மாகரீக பாமா கமரிகசா சாநீ சதா தாநி சரி சநிதபா மாகா காரிமகரீசநிரிசநீதநிதநிபா. காகம 1.சாதிகளுட பரவசமே நேயா சத்ய துத்ய சொற்கப்பதி நிசமே ஆதிவினையற வருசுதா தீயோர்க் கருமை யினோர் மத்திஸ்தா மாதத்துவச் சுத்தப்பர வெளியே வற்றா வாருதியே அசரீரி வானத்துப் பொற்புக் கானத்திற் கொட்டில் தானத்தில் புக்க தானுற்றுற் பித்த காவலவா மாவலவா ஓநலவா மேலவா மானுவேலாசை யேசையா மீசுரவடிவே பானு வேநேச மேசியா வாசக முடிவே மாசதில்லா மூவருமொரு தெய்வமே நாதா மாயையற உனதருள்புரிதின துதியே.- பூரண 2. வானவர்களின் ரகசியமே யேகா மட்டற்றுச்சப்பக்கிஷத்திரு தயமே ஞானதிசய மிகுனதமே தூயா நற்குருவே நற்கர்த்தா மோனத்துப்பத்தர் கணிகலமே முட்காடானதின் மோசை முன்மேவும் மூலத்துச் சித்துச் சீலத்துச் சொக்குத் தாலத்துட் பட்டுக் கோலத்துத் திட்டத் தாடினவா நாடினவா தேடினவா ஓடினவா மூவுலகா ளொரேக நாதா முடிவிலனே சீவபிதா பிஷேக தாதா திடவலனே மோசமிலா இயேசிசர வேலதிபா வாகா மூட மகல உன்னருள்புரிதிருவுளமே. -பூரண 3. பாதகன் மன முழுவதுமே லோகா சைக்குட் புக்கிச் சிக்கிப் பலவிதமே சூது வினை கவடுகளுமே மேலாய்த் துயருற வாதைப்பட்டே மேன்மைச் சொற்றுப் பற்றனு தினமே வெட்கா பேதையர் பாதையின் மேவி வீண் லட்சைப்பட்டு வீடற்றுக் கெட்டு நாணத்துக் குட்சி நாசக் கஸ்திக்குள் போவதுவோ சாவதுவோ ஆவதுவோ சீவனே வேதநாயகனோது பாவே பரிசனையே சீவபிதா வொடாதி தேவே தெரிசனையே வேறுபடா தேமுழு வருடமுமே நீயே மேவியுற விலென் னுடனிரு சரணமையா.- பூரண
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Poorana Kirupaiyin Mayamae Thaevaa Porpuch Seppath Thoppartrathisayamae Aarana Suba Seppa Soroopaa Yovaa Atiyanaiyae Ratsitthaal. Seerucchap Patsatthirumudhalae Sittorkkaadharavae Yanusaari Theemaik Kattarrup Poomakkat Kotthuch Saamatthil Petthalaemil Purkottil Maevuruvaa, Thaevaroopaa-moo Voruvaa Seevavaa Thaesarul Vaasanaesa Seemaa Surar Pathiyae Maasathilaesu Raasa Poomaa Narar Thuthiyae Thaeva Rellaam Neetiyati Thozhu Paraa Kaavaa Thaedarumunniru Saran Malar Inaithunaiyae Kaa Kamakama Pathanisapaa Maakaa Sakka Sakka Sakkappamakamaree Kaa Kamakama Pathanisapaa Maakaa Makamarisaa Nirisaa Reerirri Rirri Makarigasaa Sakkaa Kaarisa Maamaka Kaari Paabappa Pappathaa Thattha Thattha Neeninni Ninni Saa Sacchachsaa Saadhanipaa Saadhanipaa Saanidhapaa Maadhapaa Paadhapa Maagareega Paamaa Kamarigasaa Saanee Sathaa Thaani Sari Sanidhapaa Maakaa Kaarimakareesanirisaneedhanidhanipaa. Kaagama 1.saathigaluda Paravasamae Naeyaa Sathya Thuthya Sorkappathi Nisamae Aathivinaiyara Varusuthaa Theeyork Karumai Yinor Matthisthaa Maadhatthuvach Sutthappara Veliyae Varraa Vaaruthiyae Asareeri Vaanatthup Porpuk Kaanatthir Kottil Thaanatthil Pukka Thaanurrur Pittha Kaavalavaa Maavalavaa Onalavaa Maelavaa Maanuvaelaasai Yaesaiyaa Meesuravativae Paanu Vaenaesa Maesiyaa Vaasaka Mutivae Maasathillaa Moovarumoru Theyvamae Naathaa Maayaiyara Unatharulpurithina Thuthiyae.- Poorana 2. Vaanavarkalin Rakasiyamae Yaekaa Mattarrucchappakkishatthiru Thayamae Njaanathisaya Mikunathamae Thooyaa Narkuruvae Narkartthaa Monatthuppatthar Kanigalamae Mutkaataanathin Mosai Munmaevum Moolatthuch Sitthuch Seelatthuch Sokkuth Thaalatthut Pattuk Kolatthuth Thittath Thaatinavaa Naatinavaa Thaetinavaa Otinavaa Moovulakaa Loraega Naathaa Mutivilanae Seevapithaa Pishaega Thaathaa Thidavalanae Mosamilaa Yesisara Vaelathipaa Vaakaa Mooda Makala Unnarulpurithiruvulamae. -poorana 3. Paadhakan Mana Muzhuvathumae Lokaa Saikkut Pukkich Sikkip Palavidhamae Soothu Vinai Kavatugalumae Maelaayth Thuyarura Vaathaippattae Maenmaich Sorrup Partranu Thinamae Vetkaa Paethaiyar Paathaiyin Maevi Veen Latsaippattu Veedarruk Kettu Naanatthuk Kutsi Naasak Kasthikkul Povathuvo Saavathuvo Aavathuvo Seevanae Vaedhanaayakanothu Paavae Parisanaiyae Seevapithaa Votaathi Thaevae Therisanaiyae Vaerubataa Thaemuzhu Varudamumae Neeyae Maeviyura Vilen Nudaniru Saranamaiyaa.- Poorana