பாடல் #39207
இராஜ தாவீது குமாரவ
🔤 Iraaja Thaaveethu Kumaarava
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இராஜ தாவீது குமாரவ தாரா இயேசு ராஜா துதியே பராசீரா. 1.இராஜ வுதாரா தேச வதாரா நேச கிருபையின் விஸ்தாரா சீரா. - இராஜ 2. தாயின் கருப்பத்தே எனைக் காத்து ஆயிசு தந்தென்னைக் கண் பார்த்து சீரா. - இராஜ 3. அக்கிரமம் நீக்கினை நற்குண மாக்கினை உக்கிர நோய்களும் போக்கினை சீரா. - இராஜ 4. சீவனைக் கொடுத்துத் தீ வினைதடுத்து மேவினை நித்தம் அடுத் தடுத்து சீரா. - இராஜ 5. கிருபைக் கதித்து இரக்க மிகுத்து திருமுடி சூட்டினை ஸ்தாபித்து சீரா. - இராஜ 6. சகல நன்மைக்கும் தகுபலனளிக்க வகையிலை சிறிதெனும் தமியனுக்கு சீரா. - இராஜ 7. என்ன நான் செய்வேன் நின்னையே பணிவேன் பின்னொன்று மில்லை துதியே புரிவேன் சீரா. - இராஜ 8. பலமுறை பரிந்து நல சுபம் புரிந்து வலது செய் புது வருடம் தெரிந்து சீரா. - இராஜ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraaja Thaaveethu Kumaarava Thaaraa Yesu Raajaa Thuthiyae Paraaseeraa. 1.iraaja Vuthaaraa Thaesa Vathaaraa Naesa Kirupaiyin Visthaaraa Seeraa. - Iraaja 2. Thaayin Karuppatthae Enaik Kaatthu Aayisu Thanthennaik Kan Paartthu Seeraa. - Iraaja 3. Akkiramam Neekkinai Narkuna Maakkinai Ukkira Noykalum Pokkinai Seeraa. - Iraaja 4. Seevanaik Kotutthuth Thee Vinaidhatutthu Maevinai Nittham Atuth Thatutthu Seeraa. - Iraaja 5. Kirupaik Kathitthu Irakka Mikutthu Thirumuti Soottinai Sthaapitthu Seeraa. - Iraaja 6. Sakala Nanmaikkum Thakubalanalikka Vakaiyilai Sirithenum Thamiyanukku Seeraa. - Iraaja 7. Enna Naan Seyvaen Ninnaiyae Panivaen Pinnonru Millai Thuthiyae Purivaen Seeraa. - Iraaja 8. Palamurai Parinthu Nala Subam Purinthu Valathu Sey Puthu Varudam Therinthu Seeraa. - Iraaja