பாடல் #39201
எந்தன் பரமகுரு செய்த உபகாரத்தை
🔤 Endhan Paramakuru Seytha Ubakaaratthai
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் பரமகுரு செய்த உபகாரத்தை ஏற்றித் துதிப்பன் - நானே தந்தை பரனிடத்தா னந்தத் தொளி விளங்கச் சத்தமாக நின்ற நித்ய வஸ்துவான - எந்தன் 1.வானத்தமலர் சேனை கிரிகித்து முடியாத மகிமைப் பிரதாப மிகுத்தோன் அதி ஞானத் துடனுலகும் பரமுமதில் நிறைந்த யாவும் நெறியில் பகுத்தோன் மேன்மைப் பொருளதாக தேவ மகத்துவத்தின் விளங்கு மனந்த சுகத் தோன் அக்கி யானத் திருளகலத் தானிப் புவியிலுற்ற அந்த முடிவில்லாத சுந்தர கிறிஸ்துநாதர் - எந்தன் 2. மிக்க பராபர னோ டொக்க ஒன்றித் திருந்த முக்ய மனைத்தும் விடுத்து ஏவை மக்கள் துயரகலத் துக்க உலகமதில் மானிடவதார மெடுத்து பட்சமாக அடிமைக் கோலங் கொண்டரும் பாடுபட்டுயிர் கொடுத்து நரர் அக்கிரமம் அனைத்தும் நிக்கிரகம் புரிந்து அந்த காரமற வந்த யேசுகிறிஸ்து - எந்தன் 3. பெத்தலேம் பதியில் சுத்த கன்னியிடத்தில் புத்திரனாகப் பிறந்து திருச் சித்தமாக உலகத்தி லெங்கும் திரிந்து திவ்ய புதுமை சிறந்து மெத்த வாதையாகச் சத்துருக்கள் தம்மை மீட்கக் குருசிலிறந்து பின்னும் மத்தியஸ்தனாக வெற்றி கொண் டெழுந்து வான மேறி நடு தானே கேட்கவரும் - எந்தன் 4. பாவத்தி கிலறுத்து சாபத்தையும் தொலைத்து பகைஞன் வினையை நீக்கிக் கொடும் ஆபத்திலு மடர்ந்த கோபத்திலும் விழுந்த அடிமைகளைக் கை தூக்கி தேவத் திரவிய மென்ற சீவ போசனத்தைத் திருவுள மாயுண்டாக்கி நித்த மாபத்திரமாய் பிர தாபித்தனுக் கிரகித்து வைத்துக் காத்த ஒரே நித்ய திரித்வமான - எந்தன் 5. அந்தி சந்தியு மற்றெந்த வேளையுமன் பாகச் சங்கீதம் படிப்பேன், நெல்லை சந்த வேத நாயகன் தந்த பதங்கள் பாடித் தாளத்துடனே நடிப்பேன் சிந்தை மனமகிழ்ந்து மந்திர செபத்தினாலே தேடித் தேடிப் பிடிப்பேன், இதோ இந்த வருடத்திலுந் தந்த சுகத்துக்காக யேசு வோசனா வென்றோசை யோசையாக - எந்தன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Paramakuru Seytha Ubakaaratthai Aerrith Thuthippan - Naanae Thanthai Paranidatthaa Nandhath Tholi Vilanggach Satthamaaga Nindra Nithya Vasthuvaana - Endhan 1.vaanatthamalar Saenai Kirikitthu Mutiyaadha Makimaip Pirathaaba Mikutthon Athi Njaanath Thudanulakum Paramumathil Niraindha Yaavum Neriyil Pakutthon Maenmaip Porulathaaga Thaeva Makatthuvatthin Vilangku Manandha Sugath Thon Akki Yaanath Thirulakalath Thaanip Puviyilurtra Andha Mutivillaadha Sundhara Kiristhunaadhar - Endhan 2. Mikka Paraabara No Tokka Onrith Thirundha Mukya Manaitthum Vitutthu Aevai Makkal Thuyarakalath Thukka Ulakamathil Maanidavathaara Metutthu Patsamaaga Atimaik Kolang Kondarum Paatubattuyir Kotutthu Narar Akkiramam Anaitthum Nikkirakam Purinthu Andha Kaaramara Vandha Yaesukiristhu - Endhan 3. Petthalaem Pathiyil Suttha Kanniyidatthil Putthiranaagap Piranthu Thiruch Sitthamaaga Ulakatthi Lengkum Thirinthu Thivya Puthumai Siranthu Mettha Vaathaiyaagach Satthurukkal Thammai Meetkak Kurusiliranthu Pinnum Matthiyasthanaaga Verri Kon Tezhunthu Vaana Maeri Natu Thaanae Kaetkavarum - Endhan 4. Paavatthi Kilarutthu Saabatthaiyum Tholaitthu Pakainjan Vinaiyai Neekkik Kotum Aabatthilu Matarndha Kobatthilum Vizhundha Atimaigalaik Kai Thookki Thaevath Thiraviya Mendra Seeva Posanatthaith Thiruvula Maayuntaakki Nittha Maabatthiramaay Pira Thaapitthanuk Kirakitthu Vaitthuk Kaattha Orae Nithya Thirithvamaana - Endhan 5. Anthi Santhiyu Marrendha Vaelaiyuman Paagach Sangkeedham Patippaen, Nellai Sandha Vaedha Naayakan Thandha Pathanggal Paatith Thaalatthudanae Natippaen Sinthai Manamakizhnthu Manthira Sebatthinaalae Thaetith Thaetip Pitippaen, Itho Indha Varudatthilun Thandha Sugatthukkaaga Yaesu Vosanaa Venrosai Yosaiyaaga - Endhan