பாடல் #39200
தருண மிதுவே கிருபை
🔤 Tharuna Mithuvae Kirupai
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தருண மிதுவே கிருபை கூரும் விழிபாரும் பதம் தாரும் தாரும் 1.கருணை தெய்வ குமாரா கன மனுடவதாரா அருமை ரட்சகரேசு நாதா உல கனைத்தும் வணங்கும் சத்திய வேதா உந்தன் அடியர்க்கருளும் திருப்பாதா சற்பிரசாதா நீதா - தரு 2. கர்ப்பு மரிவயிற்றிலுற்ப வித்துப் பிறந்த கருத்தவியமே ஏசுராஜா பரி சுத்த சத்திய உபதேசா எனைக் கடாட்சித் தருளும் சருவேசா கிருபை வாசா நேசா - தரு 3. வானத் திருந்து வந்த ஞானத் தொளிர்சிறந்த மகிமைப் பிதாவின் திருப்பாலா ஆதி மைந்தர்க் கிரங்கும் அனுகூலா கன விந்தைக்கருணை மனுவேலா மெய்நூலா சீலா - தரு 4. அற்ப உலக வாழ்வில் அலைந்து நிலைகுலைந்து அலகைப் படுகுழியில் வீழ்ந்து தாழ்ந்து அஞ்சி அஞ்சி நலிந்தேனே அடிமைக் கஞ்சல் செய்யும் ஏசுகோனே சீமானே தானே - தரு 5. இந்த வருடத் தெமைச் சந்தித்தனுக் கிரகித்த சொந்தக் கிருபைகள் மாகாத்ரம் அவை சிந்தித்து முடியாவிச் சேத்ரம் நிற் பந்த அடியர்களெம் மாத்ரம் பத தோத்ரம் தோத்ரம் - தரு 6. பெத்தலேம் நகரத்திலே கன பிரியமாய் வரு கருணையாதிப பேத மில்லாத விண்ணாட்டா சருவ சாதிகளின் கொண்டாட்டா நெல்லை வேதநாயகன் பாட்டா என் தேட்டா சேட்டா - தரு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Tharuna Mithuvae Kirupai Koorum Vizhipaarum Patham Thaarum Thaarum 1.karunai Theyva Kumaaraa Kana Manudavathaaraa Arumai Ratsakaraesu Naathaa Ula Kanaitthum Vanangkum Satthiya Vaethaa Undhan Atiyarkkarulum Thiruppaathaa Sarpirasaathaa Neethaa - Tharu 2. Karppu Marivayirrilurpa Vitthup Pirandha Karutthaviyamae Aesuraajaa Pari Suttha Satthiya Ubathaesaa Enaik Kataatsith Tharulum Saruvaesaa Kirupai Vaasaa Naesaa - Tharu 3. Vaanath Thirunthu Vandha Njaanath Tholirsirandha Makimaip Pithaavin Thiruppaalaa Aathi Maindhark Kirangkum Anukoolaa Kana Vinthaikkarunai Manuvaelaa Meynoolaa Seelaa - Tharu 4. Arpa Ulaka Vaazhvil Alainthu Nilaikulainthu Alakaip Patukuzhiyil Veezhnthu Thaazhnthu Anjsi Anjsi Nalinthaenae Atimaik Kanjjal Seyyum Aesukonae Seemaanae Thaanae - Tharu 5. Indha Varudath Themaich Santhitthanuk Kirakittha Sondhak Kirupaigal Maakaathram Avai Sinthitthu Mutiyaavich Saethram Nir Pandha Atiyarkalem Maathram Patha Thothram Thothram - Tharu 6. Petthalaem Nakaratthilae Kana Piriyamaay Varu Karunaiyaathiba Paedha Millaadha Vinnaattaa Saruva Saathigalin Kontaattaa Nellai Vaedhanaayakan Paattaa En Thaettaa Saettaa - Tharu