பாடல் #39199
ஆ இந்த நன்று
🔤 Aa Indha Nanru
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆ இந்த நன்று யானறியாத தொன்று 1.கோவிந்தர்கள் போற்ற மாட்டுக் கொட்டிலுக்குள்ளே சிறந்து மாவிந்தைய தாய்ப் பரனின் மைந்தன் மனுவான செயல் - ஆ 2. சிந்தை மிகத் தேற நிர்ப்பந்த மெல்லாம் மாற சொந்தமாகக் கூறத் துயராறக் கரை யேறச் செய்த - ஆ 3. பத்தமில்லா பாதகனைச் சித்தமுடனே இது நாள் வைத் தளித்த மாதயவை எத்தனைய தென்று சொல்வேன் - ஆ 4. அன்னையிடத் தென்னை யமைத்தன்று முதல் நீ செய் தயைக் கென்ன பலம் என்ன நலம் என்ன உமக்கீடு சுவாமி - ஆ 5. அநேக நேகமாக அற்புத மிஞ்சுவி வேகச் சிநேகம் வைத்த கரிசித்த பராமரித்த - ஆ 6. வேதநாயகன் பாட விண்ணவர் வானின்றாட ஆதி செய்வினை யோட அருள் நீடக் கைகூடச் செய்த - ஆ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aa Indha Nanru Yaanariyaadha Thonru 1.kovindharkal Portra Maattuk Kottilukkullae Siranthu Maavinthaiya Thaayp Paranin Maindhan Manuvaana Seyal - Aa 2. Sinthai Migath Thaera Nirppandha Mellaam Maara Sondhamaagak Koorath Thuyaraarak Karai Yaerach Seytha - Aa 3. Patthamillaa Paadhakanaich Sitthamudanae Ithu Naal Vaith Thalittha Maadhayavai Etthanaiya Thenru Solvaen - Aa 4. Annaiyidath Thennai Yamaitthanru Mudhal Nee Sey Thayaik Kenna Palam Enna Nalam Enna Umakkeetu Suvaami - Aa 5. Anaega Naegamaaga Arpudha Minjsuvi Vaegach Sinaegam Vaittha Karisittha Paraamarittha - Aa 6. Vaedhanaayakan Paada Vinnavar Vaaninraada Aathi Seyvinai Yoda Arul Needak Kaikoodach Seytha - Aa