பாடல் #39197
தயாபராமனா ததி யினிய
🔤 Thayaabaraamanaa Thathi Yiniya
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தயாபராமனா ததி யினிய வசனா தயா பராமனா ஜெயா ஜெயா அதிசயநேயா தேவனோர் சேயா திடமிகு உபாயா ஆயா ஓ. தயாபராமனா 1.ஆதிப் பரபிரம சீராளா அருள்தாராளா வருதேவாளா அஞ்சல் தஞ்சம் மிஞ்ச விஞ்சை அதிபதி நிறையிரு புறவாளா ஆசை நேச மணவாளா - தயா 2. தேடியிப்புவி நீடியே அருள் கோடியே எமை நாடியே கூடி தூதர்கள் சாடியே கூத்தாடியே ஆயர் பாடியே பாடிநற் சுவிசேட கோடியே - தயா 3. தானா தந்தை நிதானா பெத்தலேம் கானா விடை குடில்வானா இதுசரி தானா மருள் தவிர் பானா பாவிகள் கானா அபைய மெஞ்ஞானா மீனா மங்கள சுப சோபனா - தயா 4. ஈசன் தீவினை நாசன் பாவிகள் நேசன் யேசு மாராஜனாம் மோசஞ் செய்த பிசாசை வீசவே தேசுமா பிரகாச பூசித ஆசீர்வாத தேசிகா - தயா 5. அம்பரா சிதம்பரா பரம்பரை கரு ணாம்பரா தொழும் பரா தம்ப மெங்கு மினும் பர் பரம்புமோ ரனைமரி சுதாகர சிங்காரா கும்பிடு மெலியா நம்பு மாதாரா - தயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thayaabaraamanaa Thathi Yiniya Vasanaa Thayaa Paraamanaa Jeyaa Jeyaa Athisayanaeyaa Devanor Saeyaa Thidamiku Upaayaa Aayaa O. Thayaabaraamanaa 1.aathip Parapirama Seeraalaa Arulthaaraalaa Varuthaevaalaa Anjjal Thanjjam Minjja Vinjsai Athibathi Niraiyiru Puravaalaa Aasai Naesa Manavaalaa - Thayaa 2. Thaetiyippuvi Neetiyae Arul Kotiyae Emai Naatiyae Kooti Thoodharkal Saatiyae Kootthaatiyae Aayar Paatiyae Paatinar Suvisaeda Kotiyae - Thayaa 3. Thaanaa Thanthai Nithaanaa Petthalaem Kaanaa Vitai Kutilvaanaa Ithusari Thaanaa Marul Thavir Paanaa Paavigal Kaanaa Apaiya Menjnjaanaa Meenaa Manggala Suba Sobanaa - Thayaa 4. Eesan Theevinai Naasan Paavigal Naesan Yaesu Maaraajanaam Mosanj Seytha Pisaasai Veesavae Thaesumaa Pirakaasa Poosidha Aaseervaadha Thaesikaa - Thayaa 5. Ambaraa Sidhambaraa Parambarai Karu Naambaraa Thozhum Paraa Thamba Mengku Minum Par Parampumo Ranaimari Suthaagara Singkaaraa Kumpitu Meliyaa Nampu Maathaaraa - Thayaa