பாடல் #39189
தொண்டல்லோ ஓரிபாவா
🔤 Thondallo Oripaavaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தொண்டல்லோ ஓரிபாவா தொண்டாளும் யோவா. 1.சீராளா தெய்வ பதமு செங்கோன் மைத்தாவீ தேந்திரன் சிம்மாசனாதிபதியே சென்றாளுமையா. 2. வானாட்டுச் சேனைக் கத்தா கானாட்டிலே பிறந்து மாநாட்டைக் கூட்டுதற்கோ வந்தாய் எந்தாய் நீ. 3. கர்த்தாவுக் கொரே பேறு விஸ்தார லோகங் கூறு கன முக்கிய வளமைகளோடு காத்தாளுங் கோவே. 4. அல்லற் படாமல் மாக்கள் செல்லப் பெருக்கில் வாழ்க ஆதிப் பரப் பிரமமே பாது காகாவே. 5. நம்மாதி கர்த்தரான ஞாலத் தாதித்த னென்ற இம்மானுவேலு மக்குத் துதியோசி யன்னா. 6. ஆசிக்கப்பட்ட அப்பா அன்பாக வந்த நட்பா அனாதியிப்போ தெப்போதும் தோத்திரமோ சன்னா. 7. உலக முண்டான முதல் வலிய பிதாக்கள் திரள் கலிலே மன்னா உமக்கு காத்திருந்தாரே. 8. பாட்டுச் சங்கீதங்களின் நாட்டிப் புகழைச் சொன்ன ஆட்டத் தவிது வாஞ்சித்து ஆசித்திருந்தான். 9. ஆசியோனிலிருந்து வாசியா மிரட்சிப்பு வந்தால் அடிமைச் சிறையிருப்பைத் திருப்பீரோ அப்பா. ` 10. இப்போது மீட்பரேயென் அப்பா வந்தீர் மெய்யாக இங்கேயோர் முன்னணையில் எங்கோ-மானாரே. 11. பரமண்டலத்தைவிட்டு பரதேசக் கோலமானீர் பண்ணவர் வணங்கும் நாதா பால் தேவையாச்சோ. 12. கடலுக் கெல்லையை வைத்தீர் கர்த்தா அனாதி வஸ்தே புடவையிற் சுற்றிப் புல்லிற் கிடத்தப்பட்டீரோ. 13. மெத்த மனங் கலங்கும் வேதநாயகன் பாட்டைச் சித்தமாய் கேட்டருளும் தேவ சிம்மம்மே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thondallo Oripaavaa Thontaalum Yovaa. 1.seeraalaa Theyva Pathamu Sengkon Maitthaavee Thaenthiran Simmaasanaathibathiyae Senraalumaiyaa. 2. Vaanaattuch Saenaik Katthaa Kaanaattilae Piranthu Maanaattaik Koottudharko Vanthaay Enthaay Nee. 3. Kartthaavuk Korae Paeru Visthaara Logang Kooru Kana Mukkiya Valamaigalotu Kaatthaalung Kovae. 4. Allar Pataamal Maakkal Sellap Perukkil Vaazhka Aathip Parap Piramamae Paathu Kaakaavae. 5. Nammaathi Karttharaana Njaalath Thaathittha Nendra Immaanuvaelu Makkuth Thuthiyosi Yannaa. 6. Aasikkappatta Appaa Anpaaga Vandha Natpaa Anaathiyippo Theppothum Thotthiramo Sannaa. 7. Ulaka Muntaana Mudhal Valiya Pithaakkal Thiral Kalilae Mannaa Umakku Kaatthirunthaarae. 8. Paattuch Sangkeedhanggalin Naattip Pugazhaich Sonna Aattath Thavithu Vaanjsitthu Aasitthirunthaan. 9. Aasiyonilirunthu Vaasiyaa Miratsippu Vanthaal Atimaich Siraiyiruppaith Thiruppeero Appaa. ` 10. Ippothu Meetparaeyen Appaa Vantheer Meyyaaga Ingkaeyor Munnanaiyil Engko-maanaarae. 11. Paramandalatthaivittu Parathaesak Kolamaaneer Pannavar Vanangkum Naathaa Paal Thaevaiyaachso. 12. Kataluk Kellaiyai Vaittheer Kartthaa Anaathi Vasthae Pudavaiyir Surrip Pullir Kidatthappatteero. 13. Mettha Manang Kalangkum Vaedhanaayakan Paattaich Sitthamaay Kaettarulum Thaeva Simmammae.