பாடல் #39188
நாதா கிருபை மேசியா
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
நாதா கிருபை மேசியா நம்பினோமெமக் காதாரம் நீதானேசையா. தாதா பரப்பொருளே வேதா எமக்கருளே சந்ததஞ் சந்ததந்திரன் விந்தையனந்தம் புகழ் தேவா விமரிசையே யோவா விளங்கு நித்திய - சீவா சமையங்காவா. 1.வாழ்வோ விடை கெட்டிலையா வணங்கியுன்முன் தாழ்வோந்தாளைக் கிட்டி மெய்யா பாழடராம லெமை யாளுந்ததி கடமை பங்க மடங்க வெங்கு மிங்குஞ் சிறந்துதங்கு பாலா பாவிகட் கனுகூலா பராக்கிரம செங்கோலா இம்மானுவேலா. 2. கனியால் விளைந்த வினையா கருத்தருக்குக் கனிமரியாளோரனையா பனிபோலொழிந்து போகும் அநியாய லோக மோகப் பற்றற்றுனையே கிட்டச் சித்தத்துவந்தருட் கண்பாரும் பவக் கடனைத் தீரும் பரிவின்தயை கூரும் வரங்கடரும். 3. மாடாடுலவுங் காடா மகிமைப் பதி வாகாயிருக்கும் வீடா ஈடா எடுத்துரைக்கக் கூடாதுனதிரக்கம் கோடா கோடி தூதாக்கள் கூடி அர்ச்சனை செய்யுமீசா கொண்டாடு மகாராஜா தொண்டனெலியா நேசா சருவேசா.