பாடல் #39187
ஜனித்தாரே கிறிஸ்தேசு
🔤 Janitthaarae Kiristhaesu
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜனித்தாரே கிறிஸ்தேசு மனுவாகப் பாரில் தாவீதின் வேரில் தாவீதின் ஊரில். 1.நினைத்தாரே ஜனத்தோர் பாடனைத்தையும் தீர்க்க நிர்ப்பந்தம் நீக்க முற்பவம் போக்க. 2. அனைமரி கனிமகனெனவே யுதிக்க ஆசிர்வதிக்க நேசம் கதிக்க. 3. அடியவர் நெடுநாள் வந்திட நோக்கும் நேரே ஜயன் வந்தாரே வையகத் தோரே. 4. காவலர் பாவலர் யாவரும் போற்ற கன்மஷ மாற்ற பொன்மலர் தூற்ற. 5. வாதாடும் வேதாளம் பாதலத் தோட மண்ணோர் கொண்டாட விண்ணோர் பண்பாட. 6. சுந்தர மைந்தன் பிறந்த நல் வாக்கியம் சுபமா சலாக்கியம் சபைக்கோ மெய்பாக்கியம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Janitthaarae Kiristhaesu Manuvaagap Paaril Thaaveethin Vaeril Thaaveethin Ooril. 1.ninaitthaarae Janatthor Paadanaitthaiyum Theerkka Nirppandham Neekka Murpavam Pokka. 2. Anaimari Kanimakanenavae Yuthikka Aasirvathikka Naesam Kathikka. 3. Atiyavar Netunaal Vanthida Nokkum Naerae Jayan Vanthaarae Vaiyakath Thorae. 4. Kaavalar Paavalar Yaavarum Portra Kanmasha Maartra Ponmalar Thoortra. 5. Vaathaatum Vaethaalam Paadhalath Thoda Mannor Kontaada Vinnor Panpaada. 6. Sundhara Maindhan Pirandha Nal Vaakkiyam Subamaa Salaakkiyam Sapaikko Meypaakkiyam.