பாடல் #39185
யோவாவுக்கே எந்நாளும்
🔤 Yovaavukkae Ennaalum
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யோவாவுக்கே எந்நாளும் உயர் புகழ்ச்சி ஓசன்னா ஜே யோவாவுக்கே எந்நாளும். 1.சீவனைத்தர ஆவலாய்த் தேடி வந்த யேசலா-ஜே. 2. ஆதி காவில் கனி பரித்த வாதை நீக்க அருள் பெருத்த-ஜே. 3. வானம் பூமி சகலத்திக்கும் வகுத்தனைத்தும் வாழ்விக்கும்-ஜே. 4. பெத்தலேங் கானகத்தில் உற்று வந்த வான கர்த்தா-ஜே. 5. மாட்டுக் கொட்டிலி னாட்டமா ஆட்டுக்குட்டி நேராட்டமா-ஜே. 6. மனுவடிவைக் கனிமரிய அனையிடம் பெற வருமரிய-ஜே. 7. பாக்கியம் பெற வாக்கியந் தர தீர்க்க மந்திர பார்க்கு சுந்தர-ஜே. 8. இசை யெலியா யேத்து மேல் ஏலோகி மானுவேல்-ஜே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yovaavukkae Ennaalum Uyar Pugazhchsi Osannaa Jae Yovaavukkae Ennaalum. 1.seevanaitthara Aavalaayth Thaeti Vandha Yaesalaa-jae. 2. Aathi Kaavil Kani Parittha Vaathai Neekka Arul Peruttha-jae. 3. Vaanam Poomi Sakalatthikkum Vakutthanaitthum Vaazhvikkum-jae. 4. Petthalaeng Kaanakatthil Urru Vandha Vaana Kartthaa-jae. 5. Maattuk Kottili Naattamaa Aattukkutti Naeraattamaa-jae. 6. Manuvativaik Kanimariya Anaiyidam Pera Varumariya-jae. 7. Paakkiyam Pera Vaakkiyan Thara Theerkka Manthira Paarkku Sundhara-jae. 8. Isai Yeliyaa Yaetthu Mael Aeloki Maanuvael-jae.