பாடல் #39183
தவிது கன்னி வயிற்று
🔤 Thavithu Kanni Vayirru
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தவிது கன்னி வயிற்று பாலா தயையே தயையே தயையே சரணம். தவமே நவமே சிவமே சரணம் சத்தியா மெய்க்கிறிஸ்தே யரணம் சமையம் சமையம் சமையம் கிரணம். 1.அமிர்தம் அமிர்தம் அருளும் ஆரணம் ஆதி சத்துவ புஜ நற்காரணம் அடியார் மிடிதீர் சுகமெய்த் தாரணம் அபையம் அபையம் அபையம் பூரணம். 2. நிமல சொரூப நிரூபக் கியானம் நித்தியா நீ பூர்த்தி தியானம் நிகரில் எவருமில்லை சமானம் நிலையே நிலையே நிலை நிதானம். 3. வடிவு சுந்தர இறைவா வந்தனம் படியின் பாவச் சிறுமை யந்தரம் கடவுள் படுக்கை வெறும் புல் மந்திரம் திடமே ஜெயமே ஜெயமே சந்ததம். 4. இயேசு மேசியா அதிபா சமூகம் எலியா விளம்ப இசை மனமகம் ஓசைப் பெத்தலேம் சிறிய மாட்டகம் உரிமை உரிமை உரிமை வியாபகம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thavithu Kanni Vayirru Paalaa Thayaiyae Thayaiyae Thayaiyae Saranam. Thavamae Navamae Sivamae Saranam Satthiyaa Meykkiristhae Yaranam Samaiyam Samaiyam Samaiyam Kiranam. 1.amirtham Amirtham Arulum Aaranam Aathi Satthuva Puja Narkaaranam Atiyaar Mititheer Sugameyth Thaaranam Apaiyam Apaiyam Apaiyam Pooranam. 2. Nimala Sorooba Niroobak Kiyaanam Nitthiyaa Nee Poortthi Thiyaanam Nigaril Evarumillai Samaanam Nilaiyae Nilaiyae Nilai Nithaanam. 3. Vativu Sundhara Iraivaa Vandhanam Patiyin Paavach Sirumai Yandharam Katavul Patukkai Verum Pul Manthiram Thidamae Jeyamae Jeyamae Sandhatham. 4. Yesu Maesiyaa Athipaa Samoogam Eliyaa Vilamba Isai Manamakam Osaip Petthalaem Siriya Maattakam Urimai Urimai Urimai Viyaabakam.