பாடல் #39178
ஆதியடி முடி நடு
🔤 Aathiyati Muti Natu
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதியடி முடி நடு வானபரன் வெல்லையடி வாரமனுக் கோலவடி வந்தயேசு சீர்கொளடி வந்தித்தால் நாம் வந்தித்தால் வளமிகுமே நலமிகுமே. 1.இஸ்திரி வித்தரியபரி சுத்த சுத்த மகத்துவசரி பத்தி லட்சணச் சிகரி பரமகுரு பதம் பணி தரி பாசத்தால் முழு விசுவாசத்தால் பாக்கியமே சலாக்கியமே. 2. நீத மிகுமாதி சத்தி நித்திய நீள் வேத சித்தி நிச்சய மெஞ்ஞான முத்தி நீங்கா மனு வேலைப்பற்றி நேசித்தால் நாம் நேசித்தால் நிலை மகிழ்வே நித மகிழ்வே. 3. இயேசு மகராச நிதி எங்களுயிர் சீவ பதி என்று முள திவிய கதி ஏகதுரை மகிழ் சனதி இன்பத்தால் மா இன்பத்தால் இசை நிறைவே நிச அறிவே. 4. தேவ திரியேக வஸ்து செப்பவரி தான முத்து தேவசிகாமணி சம்பத்து திரித்துவத் தொன்றாங் கிறிஸ்து சேவித்தால் நிதஞ் சேவித்தால் ஜெயம் வருமே திட மிகுமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathiyati Muti Natu Vaanaparan Vellaiyati Vaaramanuk Kolavati Vandhayaesu Seerkolati Vanthitthaal Naam Vanthitthaal Valamikumae Nalamikumae. 1.isthiri Vitthariyapari Suttha Suttha Makatthuvasari Patthi Latsanach Sigari Paramakuru Patham Pani Thari Paasatthaal Muzhu Visuvaasatthaal Paakkiyamae Salaakkiyamae. 2. Needha Mikumaathi Satthi Nitthiya Neel Vaedha Sitthi Nicchaya Menjnjaana Mutthi Neengkaa Manu Vaelaipparri Naesitthaal Naam Naesitthaal Nilai Makizhvae Nidha Makizhvae. 3. Yesu Makaraasa Nithi Enggaluyir Seeva Pathi Enru Mula Thiviya Kathi Aegathurai Makizh Sanathi Inbatthaal Maa Inbatthaal Isai Niraivae Nisa Arivae. 4. Thaeva Thiriyaega Vasthu Seppavari Thaana Mutthu Thaevasikaamani Sambatthu Thiritthuvath Thonraang Kiristhu Saevitthaal Nidhanj Saevitthaal Jeyam Varumae Thida Mikumae.