பாடல் #39176
சீருதாரி மாதயாபி
🔤 Seeruthaari Maadhayaapi
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீருதாரி மாதயாபி திவிய யேசு சுவாமி தேசிகர் சர்வவியாபி சேனை நன்மை நேமி 1.ஆரியாநிதானியாபி மானி தானி பூமி ஆசிவீச நேச ரூபியாகினார் சலாமி. நீரிரிரி சக்ககபா ரிரிபாதநிநி சாநிநிநி தாததபா மாபமபதாத நிரிரிரி சக்ககபா ரிரிபாதநிநி நிரிநிச நிசநித பாப நீதபாப 2. வஞ்சகப் பேய் சஞ்சலமே அஞ்சவே விண்ணாரே தஞ்சமே யடைந்தனமே தள்ளவே எண்ணாரே மிஞ்சும் வாஞ்சை நெஞ்சிலுமே மேவுவாரே நேரே விஞ்சைப் பெத்லேம் கானகமே விளங்கு மன்பைப்பாரே. 3. அத்தனே சத் திரிதத்துவ கர்த்தனே ஆள வந்தார லேலூயா பத்தி மிகுத்த பயத்துடனித்தனை பாட நினைமனமோயா வித்த மிகுத்த மகத்துவ சித்தனே மேவு பரா பரன்சேயா இத்தரை யுற்றவா மெய்க்கரிசித்தனே யேகனே மேசிய தூயா. 4. சிறிய எளிய நரர் கொண்டாடி சேனை தூதர் கூடி தெரிய இருளில் பிரவை நீடி செக மகிழவும் பாடி அறி ஞனெலியா துதியூடாடி அகமகிழவே நீடி அதிபதி புவி நரரைத்தேடி அடவியிடமே நாடி.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeruthaari Maadhayaapi Thiviya Yaesu Suvaami Thaesigar Sarvaviyaapi Saenai Nanmai Naemi 1.aariyaanithaaniyaapi Maani Thaani Poomi Aasiveesa Naesa Roopiyaakinaar Salaami. Neeririri Sakkakapaa Riripaadhanini Saaninini Thaadhathapaa Maabamapathaadha Niririri Sakkakapaa Riripaadhanini Nirinisa Nisanidha Paaba Needhapaaba 2. Vanjjakap Paey Sanjjalamae Anjjavae Vinnaarae Thanjjamae Yataindhanamae Thallavae Ennaarae Minjsum Vaanjsai Nenjsilumae Maevuvaarae Naerae Vinjsaip Pethlaem Kaanakamae Vilangku Manpaippaarae. 3. Atthanae Sath Thiridhatthuva Kartthanae Aala Vanthaara Laelooyaa Patthi Mikuttha Payatthudanitthanai Paada Ninaimanamoyaa Vittha Mikuttha Makatthuva Sitthanae Maevu Paraa Paransaeyaa Ittharai Yurtravaa Meykkarisitthanae Yaeganae Maesiya Thooyaa. 4. Siriya Eliya Narar Kontaati Saenai Thoodhar Kooti Theriya Irulil Piravai Neeti Sega Makizhavum Paati Ari Njaneliyaa Thuthiyootaati Agamakizhavae Neeti Athibathi Puvi Nararaitthaeti Adaviyidamae Naati.