பாடல் #39174
தயானீ கிறிஸ்து மேசியா
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
தயானீ கிறிஸ்து மேசியா அகண்ட மா பிரகாசி சுயாதிகார பரா சுபவிசேஷ காரதரா. 1.பிரவஞ்ச வஞ்சமிஞ்சி அஞ்சலென வேயிறைஞ்சி பெத்தலேம் அதிபா கெஞ்சி அதிபா கெஞ்சி கெஞ்சி வந்தேன் பாதஞ்சொலி. 2. காணொணா பரப்பொருளே-காட்டிலிடையோர்திரளே காட்சிதரும் திருவருளே திருவருளே திருவருளே அருளை நாடும் மனமகிழே. 3. வார்த்தையே மாங்கிஷத்திலேகி வடிவு சுந்தர பாலனாகி மக்கட்கிரங்குச் சாகி இரங்குச் சாகி இரங்குச் சாகி உச்சாகி விவேகி யூகி. 4. உன்னத மகத்துவ ராஜா-ஒப்பில்லாத தயை விலாசா உரை எலியா கவிராஜ கவிராஜ கவிராஜ தாச நேசா.