பாடல் #39171
ராரராரா ரோ ரார ராரா ரோ
🔤 Raararaaraa Ro Raara Raaraa Ro
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ராரராரா ரோ ரார ராரா ரோ ரார ராரா ரோ ராராதிபாலா ராரராராரோ. 1.சீரினாதிபனே பேரிலாதவனே தேவ சோதியதான திரித்துவா திவிய பாலகனே. 2. வாரும் வாரும் நின்கண் பாரும் பாரும் கிருபை கூறும் கூறும் கிருஸ்தேசுமன்னா காரும் ஓசியன்னா. 3. காவிலேயமைவாம் பாவ மாறிடவே ஆவலாய்மனு வாகப் பிறந்தவா ஆதியான் சுதனே. 4. முந்து மாதியினால் வந்த சாபமுமே சிந்தியே அழிவாக எழுந்தவா தேவ தேசிகனே. 5. வேத மாமறை யூடோதும் வாசகமே போதமாய் நிறைவேற்றப் பிறந்தவா பூலோகரட்சகனே. 6. மாறில்லாதவனே பேறு தாரவனே ஈறில்லாத தயாப சருவேசா ஏசுநாயகனே. 7. சத்தியத்துருவே நித்தியத் தொளிவே பத்து லட்சணமுள்ள சொரூபா பாவ நாசனனே. 8. ராச மாளிகைமேல் ஆசைதானில்லையோ நீச மாட்டகமானது வந்ததோ நேயதற்பரனே. 9. ஆனயாவையுமா ஞானமாகவுவே ஈன மேயணுகா மலுண்டாக்கும் நீ ஏழையோபரனே. 10. தேசுலாவிய மாரோஜ மாமலரே தூசுதானிலை யோகுளிர் மெத்தவோ ஜோதியான் மகனே. 11. எல்லை ஏதுமில்லா வல்லமைபரனே புல்லின் மேவப் பொறுத்தனையோ சுவிசேடபோதகனே. 12. ஞாலரும் பரம் வாழ் சீலருந்தொழவே பாலருந்திய ழுதனையோ நரர் பாவமோ பரனே. 13. விண்ணின் மீதினிலே எண்ணமாகவுமே அண்ணலோடுயர் பொன்முடி சூட்டுதற்கான வேடமிதோ. 14. விள்ளுதற் கெமையே வள்ளலெம் முதலோன் பிள்ளையாக்க மனு மகனாகிய பிள்ளையே ஐயனே. 15. மாசில்லா மரியாள் சூசையார் தொழவே நேசமாயுருவான அரூபா நீதியாதிபனே. 16. நீதரானவதி தூதர் பாடு முனை வேதநாயகன் பாடவு வந்தையோ வேதநாயகனே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Raararaaraa Ro Raara Raaraa Ro Raara Raaraa Ro Raaraathipaalaa Raararaaraaro. 1.seerinaathibanae Paerilaadhavanae Thaeva Sothiyathaana Thiritthuvaa Thiviya Paalakanae. 2. Vaarum Vaarum Ninkan Paarum Paarum Kirupai Koorum Koorum Kirusthaesumannaa Kaarum Osiyannaa. 3. Kaavilaeyamaivaam Paava Maaridavae Aavalaaymanu Vaagap Pirandhavaa Aathiyaan Sudhanae. 4. Munthu Maathiyinaal Vandha Saabamumae Sinthiyae Azhivaaga Ezhundhavaa Thaeva Thaesiganae. 5. Vaedha Maamarai Yootothum Vaasakamae Podhamaay Niraivaertrap Pirandhavaa Poologaratsakanae. 6. Maarillaadhavanae Paeru Thaaravanae Eerillaadha Thayaaba Saruvaesaa Aesunaayakanae. 7. Satthiyatthuruvae Nitthiyath Tholivae Patthu Latsanamulla Soroopaa Paava Naasananae. 8. Raasa Maalikaimael Aasaithaanillaiyo Neesa Maattakamaanathu Vandhatho Naeyatharparanae. 9. Aanayaavaiyumaa Njaanamaagavuvae Eena Maeyanukaa Maluntaakkum Nee Aezhaiyobaranae. 10. Thaesulaaviya Maaroja Maamalarae Thoosuthaanilai Yokulir Metthavo Jothiyaan Makanae. 11. Ellai Aethumillaa Vallamaibaranae Pullin Maevap Porutthanaiyo Suvisaedapodhakanae. 12. Njaalarum Param Vaazh Seelarunthozhavae Paalarunthiya Zhudhanaiyo Narar Paavamo Paranae. 13. Vinnin Meethinilae Ennamaagavumae Annalotuyar Ponmuti Soottudharkaana Vaedamitho. 14. Villudhar Kemaiyae Vallalem Mudhalon Pillaiyaakka Manu Makanaakiya Pillaiyae Aiyanae. 15. Maasillaa Mariyaal Soosaiyaar Thozhavae Naesamaayuruvaana Aroopaa Neethiyaathibanae. 16. Needharaanavathi Thoodhar Paatu Munai Vaedhanaayakan Paadavu Vanthaiyo Vaedhanaayakanae.