பாடல் #39169
பாரில் மனுவாகினான்
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
பாரில் மனுவாகினான் பாரிதயை வாரியான் யாரிவர் பராபரன் அடியார்க்கருள் பூரணன் 1.சீரிலங்கு நேசமே சேனையாசி வாசமே தீயரெம் விசுவாசமே - திவிய ஒளி வீசுமே. 2. பெத்தலேகேம் கானகம் உற்ற குடில் வானகம் மெத்தனவு தாயகம் விளங்கு தூய நேயகம். 3. சங்கைதுரை தங்கவே மங்கள முழங்கவே சங்கட மடங்கவே தமியர்துதி பொங்கவே. 4. பாவவினைப் போகவும் பரமபதம் சேரவும் தாழ்விலாது வாழ்கவும் சத்திய உண்மையாகவும். 5. ஆசைமணவாளனே ஆக்கொட்டிலிலாளனே யார்க்குமனுகூலனே அனாதிமனுவேலனே. 6. காட்டிடையர் கூட்டவே கேட்டை முற்றும் ஒட்டவே கேட்டமனு ஈட்டவே கிரீடமுடி சூட்டவே. 7. தாழ்மையினுதாரணம் சகலருக்கு மாரணம் மேன்மை ஞானமாகுணம் விளம்பு சீவகாரணம். 8. யேசுதிருநாமமே யாவர்கள் சந்தோஷமே தாசனெலியாவுமே சங்கீதம் சொல நாளுமே.