பாடல் #39167
இம்மானுவேல் பிறந்தார்
🔤 Immaanuvael Piranthaar
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இம்மானுவேல் பிறந்தார் இரட்சகராய் வந்தார் இதோ கொட்டிலில் சிறந்தார் எங்கட்காசியே தந்தார். 1.சிம்மாசனத்தை விட்டார்-தீயோரெமை நட்டார் எம்மாங்கிஷத்துட் பட்டார்-எல்லாருந்தழைத்திட்டார் 2. அர்த்த சாமந்தனிலே-ஆர்ந்த குளிர் நாளிலே செத்தை புல்மீதிலே ஜென்மித்தார் பெத்லேமிலே 3. உற்ற ஒத்தாசை இல்லை சற்றும் வெளிச்சமில்லை பெற்ற தாய்க்கொன்றுமில்லை சுற்றினாள் கந்தைபுல்லை 4. பாடுபசிதாகமேபட இப்பூலோகமே நீடின சிநேகமே நினைத்தால் அநேகமே. 5. தேவசேனைகள்கூடி சேர்ந்தா காயமூடி ஆவலோடே கொண்டாடி அஞ்சலிசெய்தார்பாடி 6. எப்பிராத்தாச்சிறிது ராஜா வந்தால் பெரிது தப்பிலான் கூறினதுதான் நிறைவேறினது 7. இயேசு குழந்தையாலே எந்த பிள்ளைகள் போலே தேசுற்றுநாம் விண்மேலே சேர்ந்தாளுவோம் மென்மேலே 8. காத்திரப்பவமற கர்த்தனைக்கண்டே தேற தோத்திரப்பதம் கூற சொற்சுப செபம் ஏற
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Immaanuvael Piranthaar Iratsakaraay Vanthaar Itho Kottilil Siranthaar Enggatkaasiyae Thanthaar. 1.simmaasanatthai Vittaar-theeyoremai Nattaar Emmaangkishatthut Pattaar-ellaarundhazhaitthittaar 2. Arttha Saamandhanilae-aarndha Kulir Naalilae Setthai Pulmeethilae Jenmitthaar Pethlaemilae 3. Urtra Otthaasai Illai Sarrum Velicchamillai Pertra Thaaykkonrumillai Surrinaal Kanthaipullai 4. Paatubasithaagamaebata Ippoologamae Neetina Sinaegamae Ninaitthaal Anaegamae. 5. Thaevasaenaigalkooti Saernthaa Kaayamooti Aavalotae Kontaati Anjjaliseythaarpaati 6. Eppiraatthaachsirithu Raajaa Vanthaal Perithu Thappilaan Koorinathuthaan Niraivaerinathu 7. Yesu Kuzhanthaiyaalae Endha Pillaigal Polae Thaesurrunaam Vinmaelae Saernthaaluvom Menmaelae 8. Kaatthirappavamara Kartthanaikkantae Thaera Thotthirappatham Koora Sorsuba Sebam Aera