பாடல் #39165
மேசையா பிறந்தார்
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
மேசையா பிறந்தார் இராவிலே மேசையா பிறந்தார். 1.நீச ரெமை நினைந்து நேச உருவெடுத்து இயேசையா பிறந்தார். 2. வானுலகத்தைவிட்டு ஆனிலையிலுள்பட்டு மானுவேல் பிறந்தார். 3. அட்சயமே யுண்டாக பட்சமாய் ராவிலோக இரட்சகர் பிறந்தார். 4. சாகத்தீர்க்கப்பட்ட நம் யோகத்தினாலித்தினம் மா கர்த்தர் பிறந்தார். 5. ஆகாத பேர்கள் கெட்டு போகாமலு வந்திட்டு யேகோவா பிறந்தார். 6. பாவிகளைக் கைதூக்கி ஜீவகரையில் சேர்க்க தேவ சேய் பிறந்தார். 7. அம்மையிலே நாம் வாழ்க இம்மையில் சுபமாக நம் ராஜா பிறந்தார்.