பாடல் #39164
இந்தவேளையெந்தையே யோவா
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
இந்தவேளையெந்தையே யோவா வந்துகாவையா ஓயே யோவா முந்தச் சீர்ப்பட்ட அந்தமா நகர்க் குந்தயாபரா நிந்தைக் கானேனே. 1.சத்திய வேதவாக்கிய சலாக்கியமே மெத்த வாடினேன் கைவிடாதேயும் எத்தர் சோதனையி யாவு மாறிட எளியனைக் கடாட்சியு முன்றஞ்சமே. 2. நித்திய கிருபையாள நேச பாக்கியமே பத்தன் வேதநாயகன் பாடும்பரா எத்தராகிய சத்துரு தீதறாய் இசறேல்பூசித இயேசுராசன்னுதா.