பாடல் #39162
கருணாகரனே பரமே
🔤 Karunaagaranae Paramae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கருணாகரனே பரமே சுரனே கனிவினை தீர்க்கவந்த தனிமுதலேசுநாதா 1.அருணோதயமே பரமாதிசயமே அனந்த நன்மைத்தயாப முனைந்த வுண்மைப் பிரதாப அரியபரம்பர தருமசிதம்பர அறிவினிலங்கிய முறையின் விளங்கிய அருத்தவேத புராணவிசித்திரன் பெருத்தஞான பிரதாபசுமுத்திரன் அகிலமடங்கலு மகிமைபெறும்படி யனைமரியம்மனை தனையென முன்னணை ஆதியிலே யதமேவை யராடிய பாதக மாறமகா தயவாய் வரு. 2. பரனாதியிலே திருவாய்மையிலே பகுத்து விந்தையினோடு மகத்துவசந்தோட நீடு பரிவுடனே யறுதினமதிலே யுயர் பரமுல காவையுமருளிய நேரமே பாருலகந்தனிலோர் மனுடன்றனை யேவையரென் றொரு பாவையுடன்செய்து யடர்ந்த காவிடையிரண்டு மரந்தர அடர்ந்தசீவியம் நன்றறிவென்றொரு பழத்திலே பொசியாமல் விலக்கின வழிப்படாது பிசாசுட சொற்படி பாவையராரதின் தீவினையானர தாவீது சேயெனமேவுகுணாநிதி. 3. மறையாரணனே நிறைபூரணனே வலமைக்கொரே யோவாவே தலைமைத் தேவாதி தேவே வருகையைமா மறையிருடியரோ தின வரிசையினேர் தவிதரசனினூரயல் மந்தையினாயர்கள் வந்து பணிந்தெழ விந்தை மெஞ்ஞானியர் சிந்தையுவந்திட மகிழ்ந்து வானவர் பூதலர் பாதலர் புகழ்ந்து பாடியுமாடியுமே தொழ மரியவளுந்தியிலரிய பரன்றிரு மகனென அன்புடனரருருவங் கொடு மானிடர் யாவரும் வானிடமே பெற மாடடையுங் குடினீடிய சுந்தர. 4. ஒரு நாயகனே வருதாயகனே யுண்மைக் குண்மையதான வன்மைப் பரம ஞான ஓரனுகூலா சீர் மனுவேலா உலகறியானே வலமையுன் கோனே உனைநம்பினனே தனையம்பரனே உச்சித வேதா இரட்சியும்நாதா உத்தமசீவ திரித்துவ தேவ மகத்துவராச கிறிஸ்து மணாளா ஒழிந்திடாமலே யழிந்திடாமலே யுலைந்திடாமலே யலைந்திடாமலே ஓலமோல மோசியனாவே ஓதிய வேதநாயகன் பாவே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karunaagaranae Paramae Suranae Kanivinai Theerkkavandha Thanimudhalaesunaathaa 1.arunodhayamae Paramaathisayamae Anandha Nanmaitthayaaba Munaindha Vunmaip Pirathaaba Ariyaparambara Tharumasidhambara Arivinilangkiya Muraiyin Vilangkiya Arutthavaedha Puraanavisitthiran Perutthanjaana Pirathaabasumutthiran Akilamatanggalu Makimaiperumbati Yanaimariyammanai Thanaiyena Munnanai Aathiyilae Yathamaevai Yaraatiya Paadhaka Maaramakaa Thayavaay Varu. 2. Paranaathiyilae Thiruvaaymaiyilae Pakutthu Vinthaiyinotu Makatthuvasanthoda Neetu Parivudanae Yaruthinamathilae Yuyar Paramula Kaavaiyumaruliya Naeramae Paarulakandhanilor Manudandranai Yaevaiyaren Roru Paavaiyudanseythu Yatarndha Kaavitaiyirantu Marandhara Adarndhaseeviyam Nandrarivenroru Pazhatthilae Posiyaamal Vilakkina Vazhippataathu Pisaasuda Sorpati Paavaiyaraarathin Theevinaiyaanara Thaaveethu Saeyenamaevukunaanithi. 3. Maraiyaarananae Niraipoorananae Valamaikkorae Yovaavae Thalaimaith Thaevaathi Thaevae Varukaiyaimaa Maraiyirutiyaro Thina Varisaiyinaer Thavidharasaninoorayal Manthaiyinaayarkal Vanthu Paninthezha Vinthai Menjnjaaniyar Sinthaiyuvanthida Makizhnthu Vaanavar Poodhalar Paadhalar Pugazhnthu Paatiyumaatiyumae Thozha Mariyavalunthiyilariya Paranriru Makanena Anpudanararuruvang Kotu Maanidar Yaavarum Vaanidamae Pera Maadataiyung Kutineetiya Sundhara. 4. Oru Naayakanae Varuthaayakanae Yunmaik Kunmaiyathaana Vanmaip Parama Njaana Oranukoolaa Seer Manuvaelaa Ulakariyaanae Valamaiyun Konae Unainampinanae Thanaiyambaranae Uchsidha Vaethaa Iratsiyumnaathaa Utthamaseeva Thiritthuva Thaeva Makatthuvaraasa Kiristhu Manaalaa Ozhinthitaamalae Yazhinthitaamalae Yulainthitaamalae Yalainthitaamalae Olamola Mosiyanaavae Othiya Vaedhanaayakan Paavae.