பாடல் #39160
வந்தானே பரன்மகன்
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
வந்தானே பரன்மகன் வந்தானே நமக்குப்பர மண்டலத்தைக் கொண்டு வந்தானே தந்தைப் பராபரன் சாற்றலாலே சயம்புவின்தற் சுவாபத்தைப் போலே சங்கங்களிக்க எங்குஞ் செழிக்க சனபரதாபங் கண்டு மனுடரூபங் கொண்டு. 1.திரித்துவத் தினிலிரண்டாமாளெனச் சிறந்த நாமத்தைத் தரித்து ஆதி தேவபிதாவினோடுலகத்தைரட்சை செய் வேனானென்று தெரித்து ஏவை பறித்தகனியின் விடத்தினால் வந்த பாவங்களனைத்தும் பிரித்துக் கொடும் பாதாளத்திருந்தா தாளித்தெழும் வேதாளத்தைச் சங்கரித்து அதின் மறுத்தவஞ்சக முரத்த தந்திரம் வலியதரத்தை யுடைத்துக் கெட்ட மரணத்தினுட கூரையொடித்து நரகத்தின் கதவையடத்துப் பின்னும் நெறித்த தேவ கோபத்தை மாற்றி நீண்டசாபத்தைத் துடைத்துப் பரம நீதியை நிறைவேற்றிச் சத்திய வேத நூல்களைப் படைத்து மிக வெறித்த பாவிகள் குணப்பட்டடங்க மிக்கதவங்கள் செபங்கள் துடங்க அறத்தின் றகையுஞ் சுடரத் திறத்தின் றிடமும் படரப் புறத்தங்கதமும் பிடரக் குறித்திங்கிதமுந் தொடர. 2. உன்னதத்தின் கிருபாசனத்தை விடுத் துயர்ந்த வெளியைத்தாண்டி யந்த உம்பர்கள் சேனைக்குழாங்க ளுலாவிய ஒளிவின் விரிவுந்தாண்டிச் சுடர் மின்னிய சேரக்கூடாதவெளிச்சத்தின் வீதிவிலாசமுந்தாண்டி யப்பால் விந்தைநட்சத்திர மண்டலங்களுட விம்பத்தையும் விட்டுத் தாண்டிச்சென்று பின்னையுஞ் சூரியமண்டலத்தினுட பெருஞ்சக்கரமுங் கடந்து அங்கே பெருத்தகிரகமண்டலத்தையெல்லாம் பின்னிடத்தள்ளியே நடந்து புயல் மன்னுமாகாச விரிவின் பெருவழி மட்டற்றப் பாதையிற் றொடர்ந்து இங்கே மண்டியதேவரு மண்டரும் போற்றப்பூ மண்டலத்தைக் கிட்டியடர்ந்து கடுஞ் சின்னச் சீனாக்குன்றி னெட்டைப் பிடித்துச் சேர்ந்தஸ்திவாரத்தோ டொட்டப் பொடித்துத் தின்னுங் கனிவம் போடத் துன்னும் பகையுஞ் சாடப் பன்னுந்துதியும் பாடப் பொன்னின் கிரீடமுஞ்சூட. 3. கற்பனை பத்தையுமடக்கி வேறிரண் டுற்பனக்கற்பனை யாக்கி மிகக் கனத்த அடிமைத்தனச் சீனாக்குன்றைக் கண்ணுக்குங் காணாமற் போக்கி யதின் முற்படுமடைபுச் சுவரைத்தகர்த்து முற்றுந்திறப்பதுண்டாக்கிப் பரன் முன்னிலைச் சன்னதிக்கேரூபின் காவலு மூடுந்திரையையும் நீக்கி யிட்ட பற்பலபெலிகள் சடங்கனைத்தையும் பாழ்த்தழியப் பண்ணிக்கெடுத்துத் தினம் பயப்படுத்திய மோ சே திரும்பவப் பாதைவராப்படி தடுத்து யூதர் சொற் பெருஞ் சீயோன் பருவதஞ்சென்று துலங்கு மன்றலுமடுத்து அங்கே துய்யதவிதின் செங்கோலுக்கென உய்யுமுயிருங் கொடுத்து அதி விற்பனச் சாஸ்திரவிதங்கள்முடிக்க வேதநாயகன் பதங்கள் படிக்க வெற்புத்திரமுந்திருகச் சர்ப்பத்தலையுங்கருகச் சொற்பத்துரையும் பெருகப் பொற்புப்பரமுந்தருக.