பாடல் #39156
இயேசு சுவாமி நீர்வாரும்
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
இயேசு சுவாமி நீர்வாரும் இரட்சகா நீர்வாரும் என்னையா இஷ்டம் வைத்தே திருக்கண்ணால் பாரும் ஏதமே கெடப்பாதந் தாருமையா. 1.நேச சத்திய கிறிஸ்தேந்திரா நீதியாதிப சுந்தரா நேமியாளுது ரந்தரா நீசவேத கற்பனை மந்திரா நிரந்தரா ஞானேந்திரா. 2. மாட்டுக்கொட்டிலிலே பிறந்தெனை மீட்டடிமை கொண்டீரோ மாண்டெனைப் புரந்தீரோ ஆண்டநாதா சிறைமீண்ட தாதா அன்பு பூண்டதாதா உன்னதா. 3. மட்டில்லாத மகத்துவப் பிதாவின் நேய மைந்தாவே வானவர் தொழுந் தேவே மனுவேல் தவிது நங்கோவே வரந்தாவே யன்பாவே. 4. மந்தையாயர் மகிழ்ந்தடி தொழ வந்த என் பெருமானே வந்தனம் ஞானப் பூமானே அனந்த பாக்கிய சீமானே வாஞ்சையானேன் கோமானே. 5. சத்திய பரா திரிதத்துவா சமஸ்த நன்மைச் சொரூபா சருவ லோக ஜீவ தயாபா தவறாத நித்திய பிரஸ்தாபா ததிதேவா யேயோவா. 6. முற்பிதாக்கள் தெரிசிமுனிவர் பார்க்க விரும்பும் நாட்டா மோசே கண்ட கொண்டாட்டா கவி வேதநாயகன் பாட்டா எனின் றேட்டா மன்றாட்டா.