பாடல் #39155
ஆலேலூயா ஆலேலூயா ஆலேலூயா பரர்க்
🔤 Aalaelooyaa Aalaelooyaa Aalaelooyaa Parark
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆலேலூயா ஆலேலூயா ஆலேலூயா பரர்க் கனந்தனந்த சங்கீர்த்தன மாலேலூயா. சாலோக பதங்களுக்கு மேல தானோ ரிந்தத் தாரணிமீது மகாதயவாய் நரர் சாயலின் வடிவானார். 1.திருவிரக்கமுற்ற கிறிஸ்தேசு நாதர் நரர் சீலமதாயுருவான தினாலவையே தினமே புகழ்வோம் அருள் மிகுத்த வானவரும் பாடக் கேட்கி றோமீதா ராயவொணாத மகா கிருபா நதியாழவ கோசரமே. 2. தன்னிகரில்லாத வொன்றாந் தேவபுத்திரன் எங்கள் சாயல தாயுரு வாயவ தாரம தாகிய சாதுரியன் முன்னணையிலே யிதோ படுத்திருக்கிறார் இது மூதறி வோருளம் யாவதுமே பிரமை மூடியமா தயவே. 3. அளவில்லாத வல்லவனெல்லார்க்கு மேலா னோனுல கானதும் வானதும் வானதின் மேவிய யாவையுமே தருவோன் வளமுடன் சிறு குழந்தையாக வன்னையார் கனி மாமரியாள் மடியானதிலே கிடையானதெம் மாறுதலே. 4. அதிசய மிகு மனாதிஜோதி பூமிக்குத்திக ழாரண தீத நனீத வினோத மெய் நூதன வொளிவிடுது துதிமிக இதோகொடு மிராவிருளிலும் அதி தூயபிரகாசமதா யொளிவீசுது சோதியின் மாதயவே. 5. இன்னீசருக்குன்னதமா மோட்ச வாழ்வு கிடைத் தேதமிலாமலெந் நாளும் விணூடொழிலாகவும் வாழ்கவுமே பொன்னுலகதி பதியாந் தேவபுத்திரனிந்தப் பூதலமீதினில் மாபரதேசி போலாகினர் பூரணமே. 6. அன்புடனமக் கிரங்கி நம்மை மோட்சத்தில் மா ளாத மெய்வாழ் வதினால் மிகசூரியராய் வளமேறவுமே இன்பமிகும் இரட்சகர் மகத்துவமெலாந் துறந் தீனம தாயெளியோனென நீடினரீது மகா தயவே. 7. மட்டற்ற தமதன்பின் கருத்தைக் காண்பிக்க வந்த மானுவேலாதி பராபரனேய குமாரனையே பணிவோம் இஷ்டமுடன் துதிசொல்லும் வேதநாயகன் தமி ழேறவுமேசு வென்னேசர்குழா மகிழாகவும் வாழ்கவுமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aalaelooyaa Aalaelooyaa Aalaelooyaa Parark Kanandhanandha Sangkeertthana Maalaelooyaa. Saaloga Pathanggalukku Maela Thaano Rindhath Thaaranimeethu Makaadhayavaay Narar Saayalin Vativaanaar. 1.thiruvirakkamurtra Kiristhaesu Naadhar Narar Seelamathaayuruvaana Thinaalavaiyae Thinamae Pugazhvom Arul Mikuttha Vaanavarum Paadak Kaetki Romeethaa Raayavonaadha Makaa Kirupaa Nathiyaazhava Kosaramae. 2. Thannigarillaadha Vonraan Thaevaputthiran Enggal Saayala Thaayuru Vaayava Thaarama Thaakiya Saathuriyan Munnanaiyilae Yitho Patutthirukkiraar Ithu Moodhari Vorulam Yaavathumae Piramai Mootiyamaa Thayavae. 3. Alavillaadha Vallavanellaarkku Maelaa Nonula Kaanathum Vaanathum Vaanathin Maeviya Yaavaiyumae Tharuvon Valamudan Siru Kuzhanthaiyaaga Vannaiyaar Kani Maamariyaal Matiyaanathilae Kitaiyaanathem Maarudhalae. 4. Athisaya Miku Manaathijothi Poomikkutthiga Zhaarana Theedha Naneedha Vinodha Mey Noodhana Volivituthu Thuthimiga Ithokotu Miraavirulilum Athi Thooyapirakaasamathaa Yoliveesuthu Sothiyin Maadhayavae. 5. Inneesarukkunnathamaa Motsa Vaazhvu Kitaith Thaedhamilaamalen Naalum Vinootozhilaagavum Vaazhkavumae Ponnulakathi Pathiyaan Thaevaputthiranindhap Poodhalameethinil Maabarathaesi Polaakinar Pooranamae. 6. Anpudanamak Kirangki Nammai Motsatthil Maa Laadha Meyvaazh Vathinaal Migasooriyaraay Valamaeravumae Inbamikum Iratsakar Makatthuvamelaan Thuran Theenama Thaayeliyonena Neetinareethu Makaa Thayavae. 7. Mattartra Thamathanpin Karutthaik Kaanpikka Vandha Maanuvaelaathi Paraabaranaeya Kumaaranaiyae Panivom Ishtamudan Thuthisollum Vaedhanaayakan Thami Zhaeravumaesu Vennaesarkuzhaa Makizhaagavum Vaazhkavumae.