பாடல் #39154
தேவா திருக்குமாரனுக்கு
🔤 Thaevaa Thirukkumaaranukku
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா திருக்குமாரனுக்குத் தோத்திர மோசனா செய தோத்திர மோசன்னா நித்திய தோத்திர மோசன்னா. ஆவலதாயுலகோர் பவ மாறவனாதியு மனுவானார். 1.ஆதி திரித்துவ ஜோ தியாண்ட பரனுட நீதி வேத மறை யுடனோதி மீளவு மானிட சாதி வானுல கேறி யெனூழியும் வாழ்க மகாதிருவுளமானார் தானவர் சூடிய ஜீவகிரீடமுமே முடியிடலானார் அற்புத வினோத னர்ச்சய பொற் பாதன் அருள் தேவப் பிரசாதனனைத் துயிர்க்கு நாதன் அன்பர்கள் சிந்தை மகிழ்ந்து வளம்பெற இன்ப மிகுந்துலகந்தனின் மேவிய. 2. ஆரண சத்திய மோங்க அக்கியான இருள்வாங்கத் தாரணியோர் பவம்நீங்க தற்பரனா ரடி தாங்க அந்தமிலாத பராபரனானவ ரன்புருவாய் வந்தார் சந்ததமுஞ்சபை யின்நடுவே குருமார்களையுந் தந்தார் சீருலகமெங்குந் தேவாலையங்கள் தேசுற விளங்கச் செயமங்களங்கள் சிந்துகளுங்கவி விந்தையுடன் சொலி மைந்தர் சிறந்து தொழும்படி நாடிய. 3. ஆவைமரி மனமகிழ ஆஞ்சுகள் மங்களம் புகழ் ஏவைசெய்த வினையகல இசறா வேலொடு சகல ராசர்களுங்குரு தேசிகருங்கவி நாவல ராவலரும் மாசறு பூசுரரீசுரரும் பலமாதவருந் தொழவே மாகபர மட்டும் வானதிசை யெட்டும் வாழ்வரசு கட்டு மானுவேலாளட்டும் வஞ்சகர் நெஞ்சகமஞ்சட்டும் செப விஞ்சையர் கொஞ்சியிறைஞ்சட்டும் திவிய. 4. ஆகம நீதிகள் முடிக்க அக்களித்தாஞ் சுகணடிக்க மாய்கைவலைப் பேய்துடிக்க மங்களம் வேதநாயகன் படிக்க தேகமிலாத பராபரனானவர் சிற்றுருவாய் நின்றார் மோகவிகார மூவாசைகள் யாவையு முற்றினுமே வென்றார் முற்பிதாக்கள் தேடும் மேசேசு கொண்டாடும் முத்தியர்கணாடும் மூவுலகும் பாடும் முன்னவனு ன்னத மன்னவனன்னையர் தன்னிடமுன்னிய பொன்னுலகதிசய.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Thirukkumaaranukkuth Thotthira Mosanaa Seya Thotthira Mosannaa Nitthiya Thotthira Mosannaa. Aavalathaayulakor Pava Maaravanaathiyu Manuvaanaar. 1.aathi Thiritthuva Jo Thiyaanda Paranuda Neethi Vaedha Marai Yudanothi Meelavu Maanida Saathi Vaanula Kaeri Yenoozhiyum Vaazhka Makaathiruvulamaanaar Thaanavar Sootiya Jeevakireedamumae Mutiyidalaanaar Arpudha Vinodha Narcchaya Por Paadhan Arul Thaevap Pirasaadhananaith Thuyirkku Naadhan Anbarkal Sinthai Makizhnthu Valampera Inba Mikunthulakandhanin Maeviya. 2. Aarana Satthiya Mongga Akkiyaana Irulvaanggath Thaaraniyor Pavamneengga Tharparanaa Rati Thaangga Andhamilaadha Paraabaranaanava Ranpuruvaay Vanthaar Sandhathamunjjapai Yinnatuvae Kurumaarkalaiyun Thanthaar Seerulakamengkun Thaevaalaiyanggal Thaesura Vilanggach Seyamanggalanggal Sinthugalunggavi Vinthaiyudan Soli Maindhar Siranthu Thozhumbati Naatiya. 3. Aavaimari Manamakizha Aanjsugal Manggalam Pugazh Aevaiseytha Vinaiyakala Isaraa Vaelotu Sakala Raasarkalungkuru Thaesigarunggavi Naavala Raavalarum Maasaru Poosurareesurarum Palamaadhavarun Thozhavae Maagapara Mattum Vaanathisai Yettum Vaazhvarasu Kattu Maanuvaelaalattum Vanjjakar Nenjjakamanjjattum Seba Vinjsaiyar Konjsiyirainjjattum Thiviya. 4. Aagama Neethigal Mutikka Akkalitthaanj Suganatikka Maaykaivalaip Paeythutikka Manggalam Vaedhanaayakan Patikka Thaegamilaadha Paraabaranaanavar Sirruruvaay Ninraar Mogavikaara Moovaasaigal Yaavaiyu Murrinumae Venraar Murpithaakkal Thaetum Maesaesu Kontaatum Mutthiyarkanaatum Moovulakum Paatum Munnavanu Nnatha Mannavanannaiyar Thannidamunniya Ponnulakathisaya.