பாடல் #39150
என்னையா நீரெங்கே
🔤 Ennaiyaa Neerengkae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னையா நீரெங்கே வந்தீர் ஏழையாகப் பிறந்தீர் 1.உன்னதப் பிதாவின் சேயா ஒப்பிலாக் கிருபைத் தூயா ஒருவருமறியா வருண்மிகு திருமறை நெறியே கருணையி னோவியமே யதமேவைக் காயிவ்வித முருமையுடன் மனது ருகி யுருகி. 2. சாமிக்கோராத நானே சர்ப்பத் தடிமை தானே தீமைவழி சென்றேனே தேவகிருபை யெண்ணேனே திரிமுதலவனே திறமிகு சருவவல்லபனே பாதகன் செழித்தருள் பெற முழுவுலகமுமே களித்துயரவுன்னிய திருவுளமோ 3. ஆதிவினையை நீக்கி அந்தகாரத்தைப் போக்கிச் சாதிகளைக் கைத்தூக்கித் தாதையோடுற வாக்கித் தயை சொரிந்திடவோ வும திருதய மகிழ்ந்திடவோ இசறேலர் சனத்தையும் சிறைவிடுத்தவர் துன்பதீ தனைத்தையுமதமாக்க வந்தனையோ. 4. உன்னத்தற்கு தோத்திரமுலகின்றி வெம்மாத்திரம் அன்னை கெர்ப்பத்தின் சூத்திரமறியக் கூடாவிச் சேத்திரம் அதிசயப்பொருளே அமரர்கடுதிசெயுந் தெருளே வேதநா யகத்தைந் திருமுகத் தொடு பார்த்தவன் அகத்தையுங் கடனனைத்தையுந் துலைத்தவா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaiyaa Neerengkae Vantheer Aezhaiyaagap Pirantheer 1.unnathap Pithaavin Saeyaa Oppilaak Kirupaith Thooyaa Oruvarumariyaa Varunmiku Thirumarai Neriyae Karunaiyi Noviyamae Yathamaevaik Kaayivvidha Murumaiyudan Manathu Ruki Yuruki. 2. Saamikkoraadha Naanae Sarppath Thatimai Thaanae Theemaivazhi Senraenae Thaevakirupai Yennaenae Thirimudhalavanae Thiramiku Saruvavallapanae Paadhakan Sezhittharul Pera Muzhuvulakamumae Kalitthuyaravunniya Thiruvulamo 3. Aathivinaiyai Neekki Andhakaaratthaip Pokkich Saathigalaik Kaitthookkith Thaathaiyotura Vaakkith Thayai Sorinthidavo Vuma Thirudhaya Makizhnthidavo Isaraelar Sanatthaiyum Siraivitutthavar Thunbathee Thanaitthaiyumathamaakka Vandhanaiyo. 4. Unnattharku Thotthiramulakinri Vemmaatthiram Annai Kerppatthin Sootthiramariyak Kootaavich Saetthiram Athisayapporulae Amararkatuthiseyun Therulae Vaedhanaa Yakatthain Thirumugath Thotu Paartthavan Agatthaiyung Katananaitthaiyun Thulaitthavaa.