பாடல் #3915
வானோர் வணங்கும் சர்வேசா
🔤 Vaanor Vanangkum Sarvaesaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. வானோர் வணங்கும் சர்வேசா! விந்தைக் கிருபாசன வாசா! கானான் பதி சங்கையின் ராசா! கருணை பொழியும் யேசுராசா சுவாமி ஆமென்! (3) 2. பரமண்டலத்தைத் திறந்தீரே! பாவிகளுக்காய்ப் பிறந்தீரே! தரைமண்டலத்தைப் புரந்தீரே! தயவாய் உயிரைத் தந்தீரே! சுவாமி ஆமென்! (3) 3. சத்திய பாதையும் ஜீவனுமாய் சற்குருவும் நல் மேயப்பனுமாய் சுத்த ஞான வைத்தியராய் சிறந்தெந் நானும் அருள் புரிவீர். சுவாமி ஆமென்! (3) 4. இரங்கும் இரங்கும் பராபரமே! எங்கும் இருக்கும் நிராகரமே! திறன்கள் அளிக்கும் சுந்தரமே! தினமும் அடியார் மந்திரமே. சுவாமி ஆமென்! (3)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Vaanor Vanangkum Sarvaesaa! Vinthaik Kirupaasana Vaasaa! Kaanaan Pathi Sangkaiyin Raasaa! Karunai Pozhiyum Yaesuraasaa Suvaami Aamen! (3) 2. Paramandalatthaith Thirantheerae! Paavigalukkaayp Pirantheerae! Tharaimandalatthaip Purantheerae! Thayavaay Uyiraith Thantheerae! Suvaami Aamen! (3) 3. Satthiya Paathaiyum Jeevanumaay Sarkuruvum Nal Maeyappanumaay Suttha Njaana Vaitthiyaraay Siranthen Naanum Arul Puriveer. Suvaami Aamen! (3) 4. Irangkum Irangkum Paraabaramae! Engkum Irukkum Niraagaramae! Thirankal Alikkum Sundharamae! Thinamum Atiyaar Manthiramae. Suvaami Aamen! (3)