பாடல் #39149
முன்னணையின் அரசே
🔤 Munnanaiyin Arasae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முன்னணையின் அரசே யெமை மோட்ச ராட்சியஞ் சேர்க்கத் திருவுளமோ இக்காட்சி முன்னணையின் அரசே. பொன்னகர்த் தேவாதிபதியே வானோர் வணங்கும் பூரணப் பராபரன்றன் காரணத்திருக்குமாரா பூத்தவுலகையீ டேற்றவோ வினைமாற்றவோ சாமி புல்லிற் கிடப்பதும் வல்லபரனே சொல். 1.பாவிகளுயிர் பிழைத்து மேவிவாழ்கவோ அதி பக்கிஷப் பரமனோடயிக்கமாகவோ ஜீவனேயும் மோடிருக்கவோ உம்பர்களுடன் சிறந்தொளிரவும் மறந்திகளவும் நிறைந்தன பலன் அடைந்துலவவும் தீய வெங்கடி மாயவுங் கிருபையா யெழுந்ததுவோ திரித்துவத் தொரு கிறிஸ்துன் மகத்துவம். 2. மட்டில்லா அகண்டவெளியெட்டுங் கொள்ளுமோ நெடு வானமும் புவியுங் கூடியேனும் விள்ளுமோ கெட்டமனம் சற்றுமுள்ளு மோ நின்னன்பைமுற்றும் கிரிகித்துணர்கிலன் அறிவற்றிடு புலன் மறதிக் குணமுள நெறி தப்பிய களன் கேள்வி மிஞ்சிய தாவீதின் குமராயிரங்குவையே கிருபைக் கதிசய பொறுமைக் கதிபதி. 3. தந்தலகை சொந்தடிமை வந்தனானையா மனச் சஞ்சலமிஞ்சுது சரண்தஞ்ச மேசையா எந்தனைக் கிருபைக் கண்பார்துய்யா மட்டற்றுயர்ந்த இரக்கமே மனவுருக்கமே கன பெருக்கமே வருதிருக்கருணையே யேதமே கெட வேதநாயகன் ஓதுதாயகமே யேசு ராஜ் உமக்கோசனா மனா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Munnanaiyin Arasae Yemai Motsa Raatsiyanj Saerkkath Thiruvulamo Ikkaatsi Munnanaiyin Arasae. Ponnakarth Thaevaathibathiyae Vaanor Vanangkum Pooranap Paraabarandran Kaaranatthirukkumaaraa Pootthavulakaiyee Taertravo Vinaimaartravo Saami Pullir Kidappathum Vallaparanae Sol. 1.paavigaluyir Pizhaitthu Maevivaazhkavo Athi Pakkishap Paramanodayikkamaagavo Jeevanaeyum Motirukkavo Umbarkaludan Sirantholiravum Maranthigalavum Niraindhana Palan Atainthulavavum Theeya Venggati Maayavung Kirupaiyaa Yezhundhathuvo Thiritthuvath Thoru Kiristhun Makatthuvam. 2. Mattillaa Agandaveliyettung Kollumo Netu Vaanamum Puviyung Kootiyaenum Villumo Kettamanam Sarrumullu Mo Ninnanpaimurrum Kirikitthunarkilan Arivarritu Pulan Marathik Kunamula Neri Thappiya Kalan Kaelvi Minjsiya Thaaveethin Kumaraayirangkuvaiyae Kirupaik Kathisaya Porumaik Kathibathi. 3. Thandhalakai Sondhatimai Vandhanaanaiyaa Manach Sanjjalaminjsuthu Saranthanjja Maesaiyaa Endhanaik Kirupaik Kanpaarthuyyaa Mattarruyarndha Irakkamae Manavurukkamae Kana Perukkamae Varuthirukkarunaiyae Yaedhamae Keda Vaedhanaayakan Othuthaayakamae Yaesu Raaj Umakkosanaa Manaa.