பாடல் #39148
பெத்லேமி லெம்மாலேசு
🔤 Pethlaemi Lemmaalaesu
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெத்லேமி லெம்மாலேசு பரனே மேவினார். 1.கர்த்தாதி கர்த்தாவாகிய மெய்த் தேவாதி பத்திய வஸ்தாதி மூலாதாரக் கிறிஸ்துவே வந்தார். 2. பாத்திபன்றவீது புத்திரனே கிருபாசமுத்திரனே பாவிகள்மீதிற் பட்சதா பத்தின் விசித்திரனே. 3. ஈறில்லாத ஏகதேவனே மானிடர் ஜீவனே ஏழைக் கோலமதாயி சைந்தே பூமியில் வந்தானே. 4. அளவில்லாத வல்லமைக் கோனே முழுதும் நல்லோனே ஆதாமின் பாவத்தால் மானிடனான சீமானே. 5. தேவசாயல் மேன்மைபெறவே ஜீவனுறவே சித்தமாய் நமை ரட்சிக்க அத்தனார் வந்தார். 6. வேதநாயகன் பண்பாட வேசந்தோடம் நீடவே மேசியா கிறிஸ்து யூதர் வேந்தன் வந்தாரே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pethlaemi Lemmaalaesu Paranae Maevinaar. 1.kartthaathi Kartthaavaakiya Meyth Thaevaathi Patthiya Vasthaathi Moolaathaarak Kiristhuvae Vanthaar. 2. Paatthibandraveethu Putthiranae Kirupaasamutthiranae Paavigalmeethir Patsathaa Patthin Visitthiranae. 3. Eerillaadha Aegadevanae Maanidar Jeevanae Aezhaik Kolamathaayi Sainthae Poomiyil Vanthaanae. 4. Alavillaadha Vallamaik Konae Muzhuthum Nallonae Aathaamin Paavatthaal Maanidanaana Seemaanae. 5. Thaevasaayal Maenmaiperavae Jeevanuravae Sitthamaay Namai Ratsikka Atthanaar Vanthaar. 6. Vaedhanaayakan Panpaada Vaesanthodam Needavae Maesiyaa Kiristhu Yoodhar Vaendhan Vanthaarae.