பாடல் #39146
ஓசனா வனந்தா ஓசதானந்தா
🔤 Osanaa Vananthaa Osathaananthaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓசனா வனந்தா ஓசதானந்தா ஓசனா தாவீதின் மைந்தா உந்தன் விந்தைப் பாதந்தா 1.யேசுக்கிறிஸ் தெந்தா யெந்தனையு கந்தாய் மாசறப்பிறந்தாய் மாட்டகத் தெழுந்தாய் வந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனமே. சரிகம பாப்பா தானிசானித பாபக மதமரி கபகச ரீமரினிசா சசா பாபப்ப மா மம்ம காகக்க காரி. 2. மனுடவதாரா மானிட குமாரா கனி மரியாட ருகணே நசரை யூரா காரா சற்காரா கற்பக சிங்காரா. 3. பரம சுதாகரா பரநரகுணாகரா தருணந்தருணமென் மேற்றயை செய்கி ருபாகரா தராதர சராசர தயாபர சரீரா. 4. திரு மறை வாசனா திவ்விய கிருபாசனா ஒரு ஞான போசனா உயர் பவ நாசனா ஓசன்னா மன்னா மன்னா உன்னத உன்னதனா 5. துய்ய துய்ய மெய்யா சுத்த விருதையா உய்யுமொரு மையா ஒளிர் திருக்கையா ஓசையாவும் மேசையாவும் யேசையாவும் நீயே. 6. தேசுறு மெய்த் தேவே சிங்காரப் பூங்காவே மாசிலாத மெய் வாழ்வே வானவர்கள் கோவே மாசீவா தேவா வாசேயோவாவே. 7. சொல்லாயர் பாவே துய்ய ரோசாப்பூவே அல்லாவினாவே அன்பர்கள வாவே அல்பாவே ஓமேகாவே அல்லேலூயாவே. 8. வேதநாயகன் பாட்டா விண்ணவர் கொண்டாட்டா சீத விற்பனர் கூட்டா தேவ அற்செய சீட்டா சேட்டா நன்னாட்டா வென்றேட்டா மன்றாட்டா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Osanaa Vananthaa Osathaananthaa Osanaa Thaaveethin Mainthaa Undhan Vinthaip Paadhanthaa 1.yaesukkiris Thenthaa Yendhanaiyu Kanthaay Maasarappiranthaay Maattakath Thezhunthaay Vandhanam Vandhanam Vandhanam Vandhanamae. Sarigama Paappaa Thaanisaanidha Paabaka Mathamari Kapakasa Reemarinisaa Sasaa Paabappa Maa Mamma Kaagakka Kaari. 2. Manudavathaaraa Maanida Kumaaraa Kani Mariyaada Ruganae Nasarai Yooraa Kaaraa Sarkaaraa Karpaka Singkaaraa. 3. Parama Suthaagaraa Paranarakunaagaraa Tharunandharunamen Maertrayai Seyki Rupaagaraa Tharaadhara Saraasara Thayaabara Sareeraa. 4. Thiru Marai Vaasanaa Thivviya Kirupaasanaa Oru Njaana Posanaa Uyar Pava Naasanaa Osannaa Mannaa Mannaa Unnatha Unnathanaa 5. Thuyya Thuyya Meyyaa Suttha Viruthaiyaa Uyyumoru Maiyaa Olir Thirukkaiyaa Osaiyaavum Maesaiyaavum Yaesaiyaavum Neeyae. 6. Thaesuru Meyth Thaevae Singkaarap Poongkaavae Maasilaadha Mey Vaazhvae Vaanavarkal Kovae Maaseevaa Thaevaa Vaasaeyovaavae. 7. Sollaayar Paavae Thuyya Rosaappoovae Allaavinaavae Anbarkala Vaavae Alpaavae Omaekaavae Allaelooyaavae. 8. Vaedhanaayakan Paattaa Vinnavar Kontaattaa Seedha Virpanar Koottaa Thaeva Arseya Seettaa Saettaa Nannaattaa Venraettaa Manraattaa.