பாடல் #39144
கொண்டானடிக்கிறான் வெல்லை
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
கொண்டானடிக்கிறான் வெல்லைக் கோவிலைக் கண்டு தாவிக் கூவி 1.அண்டாண்டந் தொழுமாதிக் கிறிஸ்துவைக் கண்டாலெந்தையைக் கண்டு கொண்டோமென்று நன்றாய். 2. அங்கம்பரவசமடைந்து ஆனந்தக் கடலுருகிப் பொங்கிச் சிவமென்றறிந்து புவியதிர்ந்து மன மகிழ்ந்து. 3. இருகண்களும் நீர்பெருக இசைந்து மனதோடுருக அருமைப் பரகதி தருக அனாதிக் கிறிஸ்துவே வருக. 4. சோகுப்படா முடியுடைந்து தூடணத்தலை தகர்ந்து யேகப் பொருளொன்றறிந்து இருள் ஒழிந்து அருடெளிந்து. 5. ஞானந்திரமென வுணர்ந்து ஞாயக்கலைகளை யறிந்து வானத் தமலனைப் பணிந்து மதி விளங்கக் கதி துலங்க. 6. துங்கன் றவிதிறை நேச தோன்ற லிசறேலிராச சங்க மகிழ்ந்து கூட சம்மனசுக்கள் பாட. 7. பாவமனைத்தும் போக பசாசின் ராச்சியந் தாழ்க தேவகிருபை யுண்டாக சீயோன் மலையில் வாழ்க. 8. சத்திய வேதமோங்க சாபமனைத்து நீங்க வெற்றிப் பிரபந்தம் நீடி வேதநாயகன் பாடி. கொ