பாடல் #39139
சிட்டிக் காதி யந்தா தேவ மைந்தா
🔤 Sittik Kaathi Yanthaa Thaeva Mainthaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிட்டிக் காதி யந்தா தேவ மைந்தா சிட்டர் பணியவாக் கொட்டில் வந்ததேன் சிறியர் பாதகமோ வறிவானந்தா. 1.ஞானத் திரவியனு பானக் கிருபை யா நறுமைப் பிரபலா பொறுமைத் திரித்துவத்தின் மேன்மை பொருளென முற் பெத்தலே மில் வரு மேசியா விராசா சலாங்கா. 2. ஆதி மனுடர்புரி தீதின் வலுமையால் அரியப் பாலனாய் மரிவயற்றுற் பவித்துச் சாதிகளைக் கதியிலேற்றப் பிறந்தவா சாமியேசு நாதா சலாங்கா. 3. நீடித்த கிருபைகள் கோடிக் கதிகமே நிலையிலாமலே மலைவுறு பத்தனுக்கு வீடு பெறவருள் கடாட்சப் பிரமமே வேதநாயகன் வினா சலாங்கா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sittik Kaathi Yanthaa Thaeva Mainthaa Sittar Paniyavaak Kottil Vandhathaen Siriyar Paadhakamo Varivaananthaa. 1.njaanath Thiraviyanu Paanak Kirupai Yaa Narumaip Pirapalaa Porumaith Thiritthuvatthin Maenmai Porulena Mur Petthalae Mil Varu Maesiyaa Viraasaa Salaangkaa. 2. Aathi Manudarpuri Theethin Valumaiyaal Ariyap Paalanaay Marivayarrur Pavitthuch Saathigalaik Kathiyilaertrap Pirandhavaa Saamiyaesu Naathaa Salaangkaa. 3. Neetittha Kirupaigal Kotik Kathigamae Nilaiyilaamalae Malaivuru Patthanukku Veetu Peravarul Kataatsap Piramamae Vaedhanaayakan Vinaa Salaangkaa.