பாடல் #39135
கருணாகரா வாதரி
🔤 Karunaagaraa Vaadhari
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கருணாகரா வாதரி தாபரி காதலாகிக் கூப்பிடுகின்றேன் 1.வாசகத்தான் மரிமாது கெர்ப்பத்தில் நேசமுட னுதித்த நீதிக் குமாரா ஆசியதளித் தெமக்கருள் செயும் நாதா யேசு ராசாவிஸ் தோத்திரந் தினமும். 2. ஞானப் பிரவாகமே நன்மை யற்றோமே யீனப் பசாசை வென்று ரட்சிக்கத் தானே கானகத்தினில் வருங் கருணைப் பிரதாபா மானுவேலாதிப வந்தனந் தினமும். 3. ஆதிகர்த்தா வொரே யற்சய தேவா பாதகர் வினையறப் பாடுற நாடிப் பூதலத்தினில் வரு மனுடவ தாரா வேதநாயகன் சங்கீர்த்தன்ந் தினமும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karunaagaraa Vaadhari Thaabari Kaadhalaakik Kooppitukinraen 1.vaasakatthaan Marimaathu Kerppatthil Naesamuda Nuthittha Neethik Kumaaraa Aasiyathalith Themakkarul Seyum Naathaa Yaesu Raasaavis Thotthiran Thinamum. 2. Njaanap Piravaagamae Nanmai Yarromae Yeenap Pasaasai Venru Ratsikkath Thaanae Kaanakatthinil Varung Karunaip Pirathaapaa Maanuvaelaathiba Vandhanan Thinamum. 3. Aathigartthaa Vorae Yarsaya Thaevaa Paadhakar Vinaiyarap Paatura Naatip Poodhalatthinil Varu Manudava Thaaraa Vaedhanaayakan Sangkeertthann Thinamum.