பாடல் #39134
ரார ராரோ பால ரார
🔤 Raara Raaro Paala Raara
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ரார ராரோ பால ரார ராரோ யேசு நாயகனே பால ரார ராரோ. பாரிலா தீவினை தீர வேண்டி வந்த பாத்திபனே ராச கோத்திரனே. 1.அந்த மளவில்லா வெந்தையே நீர் தய வாகவே மா பவமேக வேதா னிந்த லோக மதில் வந்ததாமோ வென்று மீறிலானே சற்று மாறிலானே. 2. காவிலாத மனை யேவைமானால் வந்த காரணமோ வாதி காரணனே பாவியான நரர் சாவிலாமல் வாழ்கப் பட்சமாச்சோ கிருபை மிச்ச மாச்சோ 3. வான நாடோபுவியான காடோ மாட்டு மந்தையான துமக் கந்தமோ தான் சேனை சூழ்வதுமக் கீனமாமோ தேவ சீலமான தேழைக் கோலந்தானோ 4. பொன்னு லோக மிந்த முன்னணையோ பரம் பூமி யாவுஞ் செய்த சாமிநாதா கன்னிதானுமுமக் கன்னியாமோ மலைக் காடல்லாமல் வேறே நாடிலையோ 5. புல்லல்லாம லொன்று மில்லையோதான் உமைப் போர்த்து தற்குத் துணியேர்த்த தோதான் வெல்லையூரிலிட மில்லையோதான் விடை வீடுதானோ சித்திரக் கூடமாச்சு 6. மிருகமாக நரர் திரிவதாலே துஷ்ட மிருக மேவுமிடம் வருகலானீர் உரிமையாளா இது பெருமை யோதானென்று மொப்பிலானே யுமக்கொப்பதாச்சோ 7. சம்மனசோர் தொழு நன்மையாளா பால் தாகமாச்சோ நரர்க்காக மாச்சோ எம்மையாள வந்த உண்மையிதோ கிறிஸ் தேக தேவா சருவலோக நாதா 8. நீதவான தேவதூதர் பாடுங் கன நேர்மையாளா இரு கூர்மைவாளா வேதநாயகனிங் கோதும்பாடல் மெத்த விருப்பமாச்சோ வானிலிருப்பு மாச்சோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Raara Raaro Paala Raara Raaro Yaesu Naayakanae Paala Raara Raaro. Paarilaa Theevinai Theera Vaenti Vandha Paatthibanae Raasa Kotthiranae. 1.andha Malavillaa Venthaiyae Neer Thaya Vaagavae Maa Pavamaega Vaethaa Nindha Loga Mathil Vandhathaamo Venru Meerilaanae Sarru Maarilaanae. 2. Kaavilaadha Manai Yaevaimaanaal Vandha Kaaranamo Vaathi Kaarananae Paaviyaana Narar Saavilaamal Vaazhkap Patsamaachso Kirupai Miccha Maachso 3. Vaana Naatopuviyaana Kaato Maattu Manthaiyaana Thumak Kandhamo Thaan Saenai Soozhvathumak Keenamaamo Thaeva Seelamaana Thaezhaik Kolanthaano 4. Ponnu Loga Mindha Munnanaiyo Param Poomi Yaavunj Seytha Saaminaathaa Kannithaanumumak Kanniyaamo Malaik Kaadallaamal Vaerae Naatilaiyo 5. Pullallaama Lonru Millaiyothaan Umaip Portthu Tharkuth Thuniyaerttha Thothaan Vellaiyoorilida Millaiyothaan Vitai Veetuthaano Sitthirak Koodamaachsu 6. Mirugamaaga Narar Thirivathaalae Thushta Miruga Maevumidam Varugalaaneer Urimaiyaalaa Ithu Perumai Yothaanenru Moppilaanae Yumakkoppathaachso 7. Sammanasor Thozhu Nanmaiyaalaa Paal Thaagamaachso Nararkkaaga Maachso Emmaiyaala Vandha Unmaiyitho Kiris Thaega Thaevaa Saruvaloga Naathaa 8. Needhavaana Thaevathoodhar Paatung Kana Naermaiyaalaa Iru Koormaivaalaa Vaedhanaayakaning Kothumpaadal Mettha Viruppamaachso Vaaniliruppu Maachso