பாடல் #39133
சீவனே நித்திய சீவனே
🔤 Seevanae Nitthiya Seevanae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீவனே நித்திய சீவனே சீவனே பரமானந்த திவ்விய பாலகனாக வந்த சீவனே நித்திய சீவனே. காவதில் விளைந்த வாதி யேவை வினைதீர வந்த. 1.வல்லமைத் திரித்துவ தேவன் சொல்லருங் கிருபைப் பிரதாபன் துல்லிபத்தின் ஞானதீபன் நல்லவர்க்கருள் தயாபன் அல்லிருட் போதே யடர் புல்லதின் மீதே வர லானவான மோன ஞான நேசமே. 2. நித்திய கிருபை பிரகாசன் அத்தனார்க் கொரே குமரேசன் சத்திய வேதத்தின் வாசன் துத்திய மிகுஞ் சருவேசன் சித்திரச் சுதனே திரிதத்துவ அற்புதனே பர தேசு லாச நேச மேசியா வேந்தே. 3. வானத்தைப் படைத்த கர்த்தர் ஞானத்தை யுடைத்த நித்தர் மேன்மைத் தேவத் துவப் பரிசுத்தர் கானத்துற்றெமைக் கரிசித்தர் மட்டளவற்றோன் மாட்டுக் கொட்டிலிலுற் றானின்று வாழ்த்தி யேற்றிப் போற்றித் தோத்திரஞ் சொல்வோம். 4. மடத்தினிடமே யன்றி அடத்துக் காட்டின் கண்ணொன்றி விடத்திரை வைக்குன்றி திடத்தினன் பர்க்கு வென்றி கொடுத்திடப் பிறந்தான் மாட்டுக் கொட்டிலிற் சிறந்தான் கோலசீல பால சாலேமின் ராசே. 5. முத்தியின் வழி யைக் காட்டி சத்துருப் பிசாசை யோட்டி பத்தனைப் பரிந்து நாட்டி மெத்தவுமன்பு பாராட்டி பெத்தலேம் பதியே வந்த வுத்தம கதியே யருள் பேசும் நேசரேசு மேசியாவே யென். 6. மண்டல மகிழ்ச்சி கூற எண்டிசை யோருங் கரையேர பண்டு வினையாவு மாறத் தொண்டரிருதயந் தேற கண்டு வந்தவனே யருட் கொண்டு வந்தவனே கிருபா காட்சி யாட்சி சூட்சி மாட்சி மைத் தேவே. 7. தூதர்கள் விண்ணினின் றாடமேதினியெல்லாங் கொண்டாட சாதிகள் தழைத்து நீட வேதநாயகன் பண்பாட பாதகந் துடைத்தான் படும் பொய்ப் போதகமுடைத்தானென்று பாடிப் பாடி நாடித் தேடியே வந்தோம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seevanae Nitthiya Seevanae Seevanae Paramaanandha Thivviya Paalakanaaga Vandha Seevanae Nitthiya Seevanae. Kaavathil Vilaindha Vaathi Yaevai Vinaitheera Vandha. 1.vallamaith Thiritthuva Devan Sollarung Kirupaip Pirathaaban Thullibatthin Njaanatheeban Nallavarkkarul Thayaaban Allirut Pothae Yatar Pullathin Meethae Vara Laanavaana Mona Njaana Naesamae. 2. Nitthiya Kirupai Pirakaasan Atthanaark Korae Kumaraesan Satthiya Vaedhatthin Vaasan Thutthiya Mikunj Saruvaesan Sitthirach Sudhanae Thiridhatthuva Arpudhanae Para Thaesu Laasa Naesa Maesiyaa Vaenthae. 3. Vaanatthaip Pataittha Kartthar Njaanatthai Yutaittha Nitthar Maenmaith Thaevath Thuvap Parisutthar Kaanatthurremaik Karisitthar Mattalavarron Maattuk Kottililur Raaninru Vaazhtthi Yaerrip Porrith Thotthiranj Solvom. 4. Matatthinidamae Yanri Adatthuk Kaattin Kannonri Vidatthirai Vaikkunri Thidatthinan Parkku Venri Kotutthidap Piranthaan Maattuk Kottilir Siranthaan Kolaseela Paala Saalaemin Raasae. 5. Mutthiyin Vazhi Yaik Kaatti Satthurup Pisaasai Yotti Patthanaip Parinthu Naatti Metthavumanpu Paaraatti Petthalaem Pathiyae Vandha Vutthama Kathiyae Yarul Paesum Naesaraesu Maesiyaavae Yen. 6. Mandala Makizhchsi Koora Entisai Yorung Karaiyaera Pantu Vinaiyaavu Maarath Thondarirudhayan Thaera Kantu Vandhavanae Yarut Kontu Vandhavanae Kirupaa Kaatsi Yaatsi Sootsi Maatsi Maith Thaevae. 7. Thoodharkal Vinninin Raadamaethiniyellaang Kontaada Saathigal Thazhaitthu Needa Vaedhanaayakan Panpaada Paadhakan Thutaitthaan Patum Poyp Podhakamutaitthaanenru Paatip Paati Naatith Thaetiyae Vanthom.