பாடல் #39130
வேதாட்சிக் கந்தங் கொண்டவான்
🔤 Vaethaatsik Kandhang Kondavaan
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேதாட்சிக் கந்தங் கொண்டவான் றேவு விமலனி சரவேற் கரசனதி மெல்கி சேதேக் கே யாசாரி நீ. மாதாட்சியாய்ச் சத்துவ மொடுக்கி மனுடருக்குப் பிறக்குமுருக்கத் திருக்கட் கிருபாநதி 1.அத்தனார் தந்தார் கத்தனார் வந்தார் பெத்தலேகேம் பதியிற் பிறந்தாரே பிதாவுக்குஞ் சுதனுக்கும் பரிசுத்த ரூபிக்கும் தோத்திரமே. 2. வானவர்க்கு மகிமை பூமியிற் சமாதானம் மாந்தருக் குள்ளே பிரிய முண்டாச்சே மத்துவாந் தங்களுஞ் சுத்த நாசங்களாய்ச் சத்தனாசதும் போச்சே. 3. சீவத் தோட்டமே செழிப்பதற் கிடமே திருவுளப் பெருக்கத் தாலாமே தினமே தினமே செயமே செயமே கொண்டாட்டமே. 4. வானாதிகாரா ஞானாதி தீரா மனுடாவதாரா பரகுமரா மகிமைப் பெருமைக் கருமைக் குரிமைக் கருணாகரா 5. மெய்யான தேவா மேலான யோவா வேதநாயகன் றோத்திரப் பாவா மீட்பா மூப்பா பாப்பா கோப்பா காப்பாவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaethaatsik Kandhang Kondavaan Raevu Vimalani Saravaer Karasanathi Melki Saethaek Kae Yaasaari Nee. Maathaatsiyaaych Satthuva Motukki Manudarukkup Pirakkumurukkath Thirukkat Kirupaanathi 1.atthanaar Thanthaar Katthanaar Vanthaar Petthalaekaem Pathiyir Piranthaarae Pithaavukkunj Sudhanukkum Parisuttha Roopikkum Thotthiramae. 2. Vaanavarkku Makimai Poomiyir Samaathaanam Maandharuk Kullae Piriya Muntaachsae Matthuvaan Thanggalunj Suttha Naasanggalaaych Satthanaasathum Pochsae. 3. Seevath Thottamae Sezhippathar Kidamae Thiruvulap Perukkath Thaalaamae Thinamae Thinamae Seyamae Seyamae Kontaattamae. 4. Vaanaathikaaraa Njaanaathi Theeraa Manutaavathaaraa Parakumaraa Makimaip Perumaik Karumaik Kurimaik Karunaagaraa 5. Meyyaana Thaevaa Maelaana Yovaa Vaedhanaayakan Rotthirap Paavaa Meetpaa Mooppaa Paappaa Koppaa Kaappaavae