பாடல் #3913
வானோர் புவோர்
🔤 Vaanor Puvor
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானோர் பூவோர் கொண்டாட மனுவேலுயிரோ டெழுந்தார் ஜெயமே. தீனதயாளன் திருமறைநூலன், திரிபுவனங்களாள் செங்கோலன், ஞானசு சீலன் நரரனுகூலன், நடுவிடவே வருபூபாலன். - வானோர் 1.அலகையை ஜெயித்தார், அருள்மறை முடித்தார், அருமலர்க்கா காவலை யொழித்தார்; நிலைதிரை கிழித்தார், தடைச்சுவரிடித்தார், நேராய்த் தரிசனந்தர விடுத்தார். - வானோர் 2.செத்தோ ருயிர்த்தார்,திருநகர் பூத்தார், தேடற் கரியதோர் காட்சிவைத்தார், மற்றோர் பார்த்தார், மலைவுகள் தீர்த்தார், மரித்தோர் முதற்பலனாய்ச் செழித்தார். - வானோர் 3.அடியவர் கண்டார், ஆர்துயர் விண்டார், அருமறைக் கருத்தாய்ந்தே நின்றார், மடமையகன்றார், மயக்கமேகொன்றார், வானானந்தமே மனங்கொண்டார். - வானோர் 4.மகதலனாளு மதி சூசன்னாளும், மயங்கியழுதயோ வன்னாளும், மகவிருவர் தருதா லொமித்தாயும் மரை மலரடிதொழு தேத்தினரே. - வானோர் 5.எம்மாவூர் சீடரி ருவர்க்குந் தோமா இலதுபதின் மருக்குமே காட்சி நன் மனதுடனே பதினோருவருக்கும் நடுவகத்தே வருமாசூட்சி. - வானோர் 6.மகதலனாட்கு மற்ற மங்கையர்க்கும் மகத்துவத்தே தரிசன மளித்தார்; பேதுரு தனித்தும் யாக்கோபு தனித்தும் பிரத்தியேகத்தில் தரிசித்தனரே.- வானோர் 7.கலிலே யாக்கடலில் எழுவரும் பார்த்தார்; காட்சி மலையஞ் நூறுபேர் பார்த்தார்; உலை எருசலமில் சீடரைச் சேர்த்தார்; ஒலிவ மலைமேல் திரள்பேர் பார்த்தார். - வானோர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanor Poovor Kontaada Manuvaeluyiro Tezhunthaar Jeyamae. Theenathayaalan Thirumarainoolan, Thiripuvananggalaal Sengkolan, Njaanasu Seelan Nararanukoolan, Natuvidavae Varupoopaalan. - Vaanor 1.alakaiyai Jeyitthaar, Arulmarai Mutitthaar, Arumalarkkaa Kaavalai Yozhitthaar; Nilaithirai Kizhitthaar, Thataichsuvarititthaar, Naeraayth Tharisanandhara Vitutthaar. - Vaanor 2.settho Ruyirtthaar,thirunakar Pootthaar, Thaedar Kariyathor Kaatsivaitthaar, Marror Paartthaar, Malaivugal Theertthaar, Maritthor Mudharpalanaaych Sezhitthaar. - Vaanor 3.atiyavar Kantaar, Aarthuyar Vintaar, Arumaraik Karutthaaynthae Ninraar, Matamaiyakanraar, Mayakkamaekonraar, Vaanaanandhamae Manangkontaar. - Vaanor 4.makathalanaalu Mathi Soosannaalum, Mayangkiyazhudhayo Vannaalum, Makaviruvar Tharuthaa Lomitthaayum Marai Malaratithozhu Thaetthinarae. - Vaanor 5.emmaavoor Seedari Ruvarkkun Thomaa Ilathubathin Marukkumae Kaatsi Nan Manathudanae Pathinoruvarukkum Natuvakatthae Varumaasootsi. - Vaanor 6.makathalanaatku Martra Mangkaiyarkkum Makatthuvatthae Tharisana Malitthaar; Paethuru Thanitthum Yaakkopu Thanitthum Piratthiyaegatthil Tharisitthanarae.- Vaanor 7.kalilae Yaakkatalil Ezhuvarum Paartthaar; Kaatsi Malaiyanj Noorupaer Paartthaar; Ulai Erusalamil Seedaraich Saertthaar; Oliva Malaimael Thiralpaer Paartthaar. - Vaanor