பாடல் #39125
பரஞ்சோதி வந்தாரே
🔤 Paranjsothi Vanthaarae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரஞ்சோதி வந்தாரே நரன்றன்றன்மை. பெருங் கொடும் பவத்தால் வரந்தருங் கிறிஸ்துப் பெத்தலேகேமினிற் பிறந்தாரே நரன்றன் றன்மை. 1.மோக்கிடப் பத்தா தீக்கிடக் கத்தா முந்தின சேயர் பிறந்தாரே மோசகால கூளிகள் வினைநீக்கி நிதஞ் சுகமே தந்தாரே. 2. கனிவினையடமே யனைமரியிடமே கடவுளர் வந்து பிறந்தாரே காதை வேத புராதன நாதன் சுபவிசேடந்தந்தாரே யனந்தந்தன்மை. 3. இத்தனை தயவாய் நித்திய பரனா ரோனாசாரி பிறந்தாரே யேசுராச குருபரனர மூர்த்தி ஆசீர்வாதந் தந்தாரே யனந்தந்தன்மை. 4. நல்கு நீதி மெல்கி சேதேக் கேயா சாரி பிறந்தாரே நாத வேத சங்கீத சுவாமி மோட்சானந்தந் தந்தாரே யனந்தந்தன்மை. 5. தேவ குமாரன் சீவ சொருபன் தாவீது ராசன் பிறந்தாரே தாழ்விலாத சம்பத்துகளாக்கி நித்திய ஜீவன் தந்தாரே யனந்தந்தன்மை. 6. சிங்காரப் பெட்டி வங்காரக் கட்டி தேவாட்டுக்குட்டி பிறந்தாரே சீவனாதி பிதாவொரு மைந்தன் பரமண்டலமே தந்தாரே யனந்தந்தன்மை. 7. நெல்வேலிமேவு சொல்வேதநாய கன்பாவென்று பிறந்தாரே நீடுகோடி பாதகவினை நீக்கி ஞான போசனந்தந்தாரே யனந்தந்தன்மை.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paranjsothi Vanthaarae Narandrandranmai. Perung Kotum Pavatthaal Varandharung Kiristhup Petthalaekaeminir Piranthaarae Narandran Ranmai. 1.mokkidap Patthaa Theekkidak Katthaa Munthina Saeyar Piranthaarae Mosakaala Kooligal Vinaineekki Nidhanj Sugamae Thanthaarae. 2. Kanivinaiyatamae Yanaimariyidamae Katavular Vanthu Piranthaarae Kaathai Vaedha Puraadhana Naadhan Subavisaedandhanthaarae Yanandhandhanmai. 3. Itthanai Thayavaay Nitthiya Paranaa Ronaasaari Piranthaarae Yaesuraasa Kurubaranara Moortthi Aaseervaadhan Thanthaarae Yanandhandhanmai. 4. Nalku Neethi Melki Saethaek Kaeyaa Saari Piranthaarae Naadha Vaedha Sangkeedha Suvaami Motsaanandhan Thanthaarae Yanandhandhanmai. 5. Thaeva Kumaaran Seeva Soruban Thaaveethu Raasan Piranthaarae Thaazhvilaadha Sambatthugalaakki Nitthiya Jeevan Thanthaarae Yanandhandhanmai. 6. Singkaarap Petti Vangkaarak Katti Thaevaattukkutti Piranthaarae Seevanaathi Pithaavoru Maindhan Paramandalamae Thanthaarae Yanandhandhanmai. 7. Nelvaelimaevu Solvaedhanaaya Kanpaavenru Piranthaarae Neetukoti Paadhakavinai Neekki Njaana Posanandhanthaarae Yanandhandhanmai.